
போர்ச்சுகல் அணிக்காக முதல் சதம்... அசத்தும் ஆஸி. முன்னாள் நட்சத்திரம் ஹென்ரிக்ஸ்!
போர்ச்சுகல் அணிக்காக சதம் விளாசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திரம் மொய்சஸ் ஹென்ரிக்ஸை பற்றி...
மொய்சஸ் ஹென்ரிக்ஸ்.
போர்ச்சுகல் அணிக்காக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திரம் ஹென்ரிக்ஸ் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர முன்னாள் வீரர் மொய்சஸ் ஹென்ரிக்ஸ், அந்த அணியிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில், தற்போது போர்ச்சுகல் அணிக்காக விளையாடி வருகிறார்.
கால்பந்தில் பிரபலமான போர்ச்சுகல் அணி கிரிக்கெட்டில் வேகமாக முன்னேறி வருகிறது. டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளில் ஐரோப்பிய பிரிவில் போர்ச்சுகல் அணி விளையாடி வருகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற செக் குடியரசு அணியை போர்ச்சுகல் எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆடிய போர்ச்சுகல் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய கேப்டன் மொய்சஸ் ஹென்ரிக்ஸ், 51 பந்துகளில் 12 பௌண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 111 ரன்கள் குவித்தார்.
அடுத்து ஆடிய செக் குடியரசு அணி விளையாடியபோது மழை குறுக்கீட்டது. இதனால், டக்வொர்த்-லூயிஸ் முறைப்படி 116 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. செக் குடியரசு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 24 ரன்கள் மட்டுமே எடுத்ததால் டக்வொர்த்-லூயிஸ் முறைப்படி, போர்ச்சுகல் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.
உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றில் தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் வெற்றிப் பெற்றிருக்கும் போர்ச்சுகல் அணிக்கு ஹென்ரிக்ஸின் சதம் உத்வேகமாக அமைந்திருக்கிறது. மேலும், 2028 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்குத் தகுதி பெறும் முனைப்பிலும் இருக்கிறது போர்ச்சுகல்.
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பத்தாண்டுகளுக்கு மேலாக 44 டி20 போட்டிகளில் விளையாடியிருந்தாலும் ஒரு போட்டியில்கூட சதம் அடிக்கவில்லை. ஆனால், போர்ச்சுகல் அணிக்காக விளையாடிய மூன்றாவது போட்டியிலேயே சதம் அடித்து ஆட்டநாயகன் விருதையும் தனதாக்கியிருக்கிறார் ஹென்ரிக்ஸ்.
Summary
Former Australian cricketer Moises Henriques marked his international switch to Portugal in emphatic fashion, smashing his maiden T20I century just three matches into his new career for the European nation.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





