தமிழக ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு! திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!முதல்வர் விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்த பரந்தூர் விவசாயிகள்! தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!

இங்கிலாந்து அணியில் பிரைடன் கார்ஸ் நீக்கம்..! மாற்று வீரர் அறிவிப்பு!

அடிதடி சர்ச்சையில் சிக்கிய பிரைடன் கார்ஸுக்குப் பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

England's Sonny Baker bowls on the fourth day of the second cricket Test match between England and New Zealand at The Oval in London on June 20, 2026. (Photo by Glyn KIRK / AFP)

சோனி பேக்கர் (கோப்புப் படம்) - படம்: AFP

Published On :25 ஆகஸ்ட் 2026, 4:16 pm IST

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் அடிதடி சர்ச்சையில் சிக்கிய பிரைடன் கார்ஸுக்குப் பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனில் வரும் ஆக.27ஆம் தேதி விளையாடவிருக்கிறது. இந்த நிலையில், பிரைடன் கார்ஸ் நைட் கிளப்பில் அடிதடியில் கைது செய்யப்பட்டதால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பிரைடன் கார்ஸுக்குப் பதிலாக சோனி பேக்கர் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். 23 வயதான சோனி பேக்கர் இதுவரை ஒரேயொரு டெஸ்ட்டில் மட்டுமே விளையாடியுள்ளார். அதில் 3 விக்கெட்டுகள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஏழாவது இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் அணி 9ஆவது இடத்தில் இருக்கிறது.

இங்கிலாந்து அணி: ஜோ ரூட் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், சோனி பேக்கர், ஹாரி ப்ரூக், சாம் குக், ஜோர்டான் காக்ஸ், பென் டக்கெட், மேத்யூ ஃபிஷர், எமிலியோ கே, டான் லாரன்ஸ், ஆலி போப், ஆலி ராபின்சன், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங்.

Summary

Sonny Baker replaces Brydon Carse in England squad for 2nd Test against Pakistan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.