

கேகேஆர் அணி வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஷ்தஃபிசூர் ரஹ்மானை தனது அணியிலிருந்து நீக்கியது.
இவருக்குப் பதிலாக வெளிநாட்டு வீரர் ஒருவரை கேகேஆர் அணி எடுத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது.
வங்கதேசத்தில் இந்துக்கள் கொடுமைப்படுத்தப்பட்டு வருவதால் அந்தப் பிரச்னை இந்தியாவில் எதிரொலிக்கப்பட்டு வருகின்றது.
சமீபத்தில் இந்து அமைப்புகள் கேகேஆர் அணியின் உரிமையாளர் ஷாருக் கானை தேசத் துரோகி என விமர்சித்தது.
இதனைத் தொடர்ந்து பிசிசிஐ இந்த விவகாரத்தில் தலையிட்டு கேகேஆர் அணி முஷதஃபிசூர் ரஹ்மானை விடுவிக்கும்படி கூறியிருந்தது.
ஐபிஎல் மினி ஏலத்தில் இவரை எடுக்க சிஎஸ்கே ரூ.9 கோடி வரை சென்றது. இறுதியில் ரூ.9.2 கோடிக்கு கேகேஆர் அணி எடுத்தது.
ஏற்கெனவே, இவர் சிஎஸ்கே அணியில் விளையாடி இருக்கிறார். இந்நிலையில், கேகேஆர் அணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அடுத்த ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு முன்பாக பிசிசிஐ / ஐபிஎல் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி கேகேஆர் முஷ்தஃபிசூர் ரஹ்மானை அணியில் இருந்து விடுவிக்கிறது.
இது பிசிசிஐ தெரிவித்த அறிவுரையின்படி நடத்தப்பட்டது. ஐபிஎல் விதிமுறைகளுக்கு உள்பட்டு கேகேஆர் அணி மாற்றுவீரரை எடுத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.