

தென்னாப்பிரிக்க வீரர் ஃபாப் டு பிளெஸ்ஸி டி20 கிரிக்கெட்டில் 12,000 ரன்களைக் கடந்து வரலாறு படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்க வீரர்களிலேயே இந்த மைல்கல்லை எட்டும் முதல் வீரராக ஃபாப் டு பிளெஸ்ஸி இருக்கிறார்.
எஸ்ஏ20 தொடரில் ஜேஎஸ்கே அணியில் விளையாடும் ஃபாப் டு பிளெஸ்ஸி, அந்த அணிக்கு கேப்டனாகவும் செயல்படுகிறார்.
எம்ஐ கேப்டௌன் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 12,000 டி20 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
உலக அளவில் இந்த மைல்கல்லை எட்டும் 10-ஆவது நபராகவும் தென்னாப்பிரிக்க வீரர்களில் முதல் நபராகவும் சாதனை படைத்துள்ளார்.
இந்த மைல்கல்லை ஃபாப் டு பிளெஸ்ஸி வெறுமனே 429 டி20 இன்னிங்ஸ்களில் அடைந்துள்ளார். இதில் 83 அரைசதங்கள், 8 சதங்கள் அடங்கும், அதிகபட்சமாக 120 ரன்கள் எடுத்துள்ளார்.
டி20களில் அதிக ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்க வீரர்கள்
1. ஃபாப் டு பிளெஸ்ஸி - 12, 001 ரன்கள்
2. குவிண்டன் டி காக் - 11, 813 ரன்கள்
3. டேவிட் மில்லர் - 11, 631 ரன்கள்
4. ரைலி ரூஸ்ஸோவ் - 9,705 ரன்கள்
5. ஏபி டி வில்லியர்ஸ் - 9,424 ரன்கள்.
ஜேஎஸ்கே அணி டு பிளெஸ்ஸிக்கு காட் ஃபாதர் பாணியில் போஸ்டரை வெளியிட்டு கௌரவப்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.