குறைவான போட்டிகளில் ஜோ ரூட் சாதனையை விஞ்சும் ஸ்டீவ் ஸ்மித்!

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் படைக்கவிருக்கும் சாதனை குறித்து...
Australia's Steve Smith reacts after taking a catch to dismiss England's Ben Stokes during play on day four of the fifth and final Ashes cricket test between England and Australia in Sydney
பென் ஸ்டோக்ஸ் கேட்ச்சினால் துள்ளிக் குதித்தோடும் ஸ்டீவ் ஸ்மித். படம்: ஏபி
Updated on
1 min read

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் குறைவான போட்டிகளில் அதிக கேட்சுகள் எடுத்து சாதனை படைக்கவிருக்கிறார்.

ஜோ ரூட்டை விட 40 போட்டிகள் குறைவாகவே இந்த சாதனையை ஸ்டீவ் ஸ்மித் நிகழ்த்தவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆஷஸ் தொடரில் 4 போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித் தனது அசத்தலான ஃபீல்டிங்கின் மூலமாக இதுவரை 14 கேட்ச்சுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

குறிப்பாக இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 2, இரண்டாவது இன்னிங்ஸில் 3 என மொத்தம் 5 கேட்ச்சுகள் என ஃபீல்டிங்கில் ஆட்டத்தையே மாற்றினார்.

ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் கேட்ச்சுகள்

முதல் டெஸ்ட் - 4 கேட்ச்சுகள்

இரண்டாவது டெஸ்ட் - 5 கேட்ச்சுகள்

மூன்றாவது டெஸ்ட் - விளையாடவில்லை.

நான்காவது டெஸ்ட் - 2 கேட்ச்சுகள்

ஐந்தாவது டெஸ்ட் - 3 கேட்ச்சுகள்

இதன்மூலம் 215 கேட்ச்சுகளுடன் ஜோ ரூட்டிற்கு அருகில் சென்றுள்ளார்.

ஜோ ரூட்டை விட 40 போட்டிகளில் குறைவாக விளையாடி இருக்கும் ஸ்டீவ் ஸ்மித் இன்னும் ஒரு கேட்ச் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்.

விரைவில் முதலிடம் பிடித்து குறைவான போட்டிகளிலே புதிய உலக சாதனை நிகழ்த்தவிருக்கிறார்.

டெஸ்ட்டில் அதிக கேட்ச்சுகள்

1. ஜோ ரூட் - 216 (163 போட்டிகள்)

2. ஸ்டீவ் ஸ்மித் - 215 (123 போட்டிகள்)

3. ராகுல் திராவிட் - 210 (164 போட்டிகள்)

4. மஹிலா ஜெயவர்தனே - 205 (149 போட்டிகள்)

5. ஜேக் காலிஸ் - 200 (166 போட்டிகள்)

Summary

Australian player Steve Smith is set to create a record by taking the most catches in the fewest matches.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com