

இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யாதது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் ஹாசாரே கோப்பையில் அதிவேகமாக சதம் அடித்த அவருக்கு இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பளிக்காதது கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா ஒருவேளை இந்தத் தொடரில் பங்கேற்று பேட்டிங்கில் 96 ரன்கள் பந்துவீச்சில் 9 விக்கெட்டுகள் எடுத்தால் தலைசிறந்த ஆலர்வுண்டர்கள் வரிசையில் அவரது பெயரும் இடம்பெற்றிருக்கும்.
இதுவரை ஹார்திக் பாண்டியா தனது 94 போட்டிகளில் 68 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 1,904 ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில் 91 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
இதற்கு முன்பாக 2000 ரன்கள், 100 விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் ஷேன் வாட்சன், ஜேக் காலிஸ், சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், கபில் தேவ், சனத் ஜெயசூர்யா, விப் ரிச்சர்ட்ஸ், போன்ற ஜாம்பவான்கள் இருந்துள்ளார்கள்.
நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஹார்திக் பாண்டியா விளையாடி இருந்தால் எளிமையாக இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பார்.
ஒருநாள் உலகக் கோப்பை 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், ஹார்திக் பாண்டியாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்திய அணி: ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா
நியூசிலாந்து அணி: டெவன் கான்வே, வில் யங், ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஜகரி ஃபோல்க்ஸ், நிக் கெல்லி, ஜோஷ் கிளார்க்சன், மைக்கேல் ரே, கைல் ஜேமிசன், மிட்செல் ஹே, ஆதித்யா அசோக், கிறிஸ்டியன் கிளார்க், ஜெய்டன் லெனாக்ஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.