

இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா தனது பத்தாண்டு கிரிக்கெட் பயணம் குறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
இந்திய அணி கடந்த டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல ஹார்திக் பாண்டியா முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்
ஹார்திக் பாண்டியா தனது 22 வயதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியில் ஜன.26, 2016-ல் அறிமுகமானார்.
127 டி20 போட்டிகளில் 105 விக்கெட்டுகள் மற்றும் 2,027 ரன்களைக் குவித்துள்ளார்.
94 ஒருநாள் போட்டிகளில் 91 விக்கெட்டுகள் மற்றும் 1,904 ரன்கள் எடுத்துள்ளார்.
உலகத்திலேயே மிகச் சிறந்த ஆல்-ரவுண்டராக ஹார்திக் பாண்டியா தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார்.
இன்னல்களுக்கு நன்றி
இந்நிலையில், தனது பத்தாண்டு கிரிக்கெட் பயணம் குறித்து பாண்டியா இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது:
கிரிக்கெட் பயணத்தில் பத்தாண்டுகள், இந்தாண்டுதான் எனக்கு 33 வயதானது.
நான் மனமார நேசிக்கும் விளையாட்டை விளையாடுகிறேன் என்பது ஒரு விஷயம்; மற்றொன்று, இதன் மூலமாக எனது தாய் நாட்டிற்குச் சேவையும் ஆற்றுகிறேன்.
அனைவரையும் நேசிக்கிறேன். அனைவற்றுக்கும் நன்றி. என்னை இங்குக் கொண்டுவந்த பல இன்னல்கள், சோதனைகள் அளித்த கடவுள்ளுக்கு நன்றி.
இந்த வாய்ப்புக்காகப் பலர் காத்திருக்கிறார்கள். இந்த வாழ்க்கையை வாழ வாய்ப்பளித்த கடவுளுக்கு நன்றி.
பேட்டிங் வாய்ப்பு கிடைக்காத பந்துவீச்சாளர்களுக்காக...
இந்தாண்டு வெறுமனே எனக்கு தொடக்கம் மட்டும்தான். நான் நினைத்த பாதையில் நடக்க இப்போதுதான் தொடங்கியுள்ளேன்.
நீங்கள் அனுமதித்தால் இதைச் சொல்கிறேன்... பரோடாவில் இருந்து கூடுதலாக சில மைல் தூரம் ஓடிய இளமையான ஹார்திக் பாண்டியாவைப் பார்க்கிறேன். ஒரு பேட்டராக நான் வலைப் பயிற்சியில் கூடுதலாகப் பந்துவீசியுள்ளேன். காரணம் என்னவென்றால், பேட்டிங் வாய்ப்பே கிடைக்காத பந்துவீச்சாளர்களுக்காக.
19 வயதில் ஆல்ரவுண்டராக மாறினேன். அதனால் கவனம் பெற்று, சில இடங்களில் தேர்வாகி, சில இடங்களில் புறக்கணிக்கப்பட்டும் இருக்கிறேன். எனது நாட்டிற்காக விளையாடியதுதான் எனது பயணத்தின் சிறப்பான விஷயம்.
ஜன.26ஆம் தேதி நான் அறிமுகமானபோது, கடவுள் எனக்காக சிறந்த திட்டங்களை உருவாக்கியுள்ளார்.
இந்த விளையாட்டை விளையாடும்போதுதான் நான் ஆணாகவும் மாறினேன். விளையாடியே வயதும் ஆகிறது. ஜெய்ஹிந்த் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.