

யு19 உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய வீரர் நிதீஷ் சாமுவேல் யு19 உலகக் கோப்பைத் தொடரில் 172 சராசரியுடன் விளையாடி வருகிறார்.
உலக அளவில் இவ்வளவு சராசரியுடன் விளையாடும் இரண்டாவது வீரராக சாதனை படைத்துள்ளார்.
ஜிம்பாப்வே, நமீபியாவில் நடைபெற்றுவரும் யு19 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி வருகிறது.
இந்த அணி குரூப் ஏ,டி பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
இந்த அணியின் 19 வயது வீரரான நிதீஷ் சாமுவேல் சிறப்பாக விளையாடி 172 ரன்கள் குவித்துள்ளார்.
மூன்றுமுறை ஆட்டமிழக்காமல் (77*,60*,19*) இருந்ததால் அவரது சராசரி 172ஆக உயர்ந்திருக்கிறது.
யு19 உலகக் கோப்பையில் அதிக சராசரி
1. ஹியூகோ கெல்லி - 200 (ஜப்பான்)
2. நிதீஷ் சாமுவேல் - 172 (ஆஸி.)
3. அபிமன்யூ குண்டு - 122 (இந்தியா)
4. பென் மாயூஸ் - 107.33 (இங்கிலாந்து)
5. அத்நித் ஜாம்ப் - 104 (அமெரிக்கா)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.