

வங்கதேசம் தங்களது டி20 போட்டிகளை இலங்கையில் நடத்த வேண்டுமென்ற கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களால், வங்கதேசம் அணி இந்தியாவில் நடைபெறும் டி20 போட்டிகளில் விளையாட மறுத்தது சமீபத்தில் சர்ச்சையைக் கிளப்பியது.
என்ன பிரச்னை?
வங்கதேசத்தில் இந்துக்கள் கொலை செய்யப்படுவதால் அதன் தாக்கம் இந்தியாவில் எதிரொலித்தது.
அதனால், வங்கதேச வீரர் முஷ்தஃபிகுர் ரஹ்மானை ஐபிஎல் நிர்வாகம் வேண்டிக்கொண்டதன் பேரில் கேகேஆர் அணி நீக்கியது.
இந்தக் காரணத்தினால், வங்கதேச அணியினர் இந்தியாவில் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூறி இலங்கையில் விளையாட ஐசிசியிடம் அனுமதி கோரினர்.
ஐசிசி அதிகாரிகள் வங்கதேச கிரிக்கெட் வாரியத்துடன் காணொலி வாயிலாக பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளனர்.
அனுமதி மறுப்பு ஏன்?
தகவலின்படி பாகிஸ்தான், வங்கதேசம் மட்டுமே இதற்கு ஆதரவாக ஓட்டளித்ததாகவும் மற்ற அணிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் வங்கதேசத்துக்கு பாதுகாப்பில் குறைவில்லை என்றும் கடைசி நேரத்தில் போட்டிகளை மாற்ற முடியாது என்றும் ஐசிசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது அறிக்கையில் ஐசிசி, “இந்தச் சூழ்நிலையில் போட்டிகளை இடம் மாற்றுவது ஐசிசியின் புனிதத் தன்மைக்கு ஊரு விளைவிப்பதாகும். மேலும், இது உலக அரங்கில் இது ஐசிசியின் நடுநிலைத்தன்மைக்கு பாதகமாக அமையும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் இருந்து வங்கதேசம் விலகினால் ஐசிசி தரவரிசையின்படி அடுத்த இடத்தில் இருக்கும் அணி டி20 உலகக் கோப்பையில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.