

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான ஸ்காட்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கவுள்ளது. உலகக் கோப்பைத் தொடருக்கான அணிகள் அனைத்தும் கிட்டத்தட்ட அறிவிக்கப்பட்டுவிட்டன.
உலகக் கோப்பைத் தொடரை இந்தியாவில் விளையாட மறுத்த வங்கதேச அணிக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி அண்மையில் உலகக் கோப்பைத் தொடரில் சேர்க்கப்பட்டது.
இந்த நிலையில், உலகக் கோப்பைத் தொடருக்கான ஸ்காட்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
15 பேர் கொண்ட அணியை ரிச்சி பெர்ரிங்டான் கேப்டனாக வழிநடத்துகிறார்.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான ஸ்காட்லாந்து அணி விவரம்
ரிச்சி பெர்ரிங்டான் (கேப்டன்), டாம் ப்ரூஸ், மேத்யூ கிராஸ், பிராட்லி கர்ரி, ஆலிவர் டேவிட்சன், கிறிஸ் கிரீவ்ஸ், ஷைனுல்லா இஷான், மைக்கேல் ஜோன்ஸ், மைக்கேல் லீஸ்க், ஃபின்லே மெக்ராத், பிரண்டன் மெக்முல்லன், ஜியார்ஜ் முன்சே, சஃப்யான் ஷரீஃப், மார்க் வாட், பிராட்லீ வீல்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஸ்காட்லாந்து அணி இத்தாலி, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து மற்றும் நேபாளம் ஆகிய அணிகளுடன் குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.