மகளிர் பிரீமியர் லீக்கில் ஓர் இடத்துக்குப் போட்டியிடும் 3 அணிகள்!

மகளிர் பிரீமியர் லீக்கின் பிளே ஆப்ஸுக்கான கடைசி வாய்ப்பு குறித்து...
Players from the Mumbai, UP, and Delhi teams.
மும்பை, யுபி, தில்லி அணி வீராங்கனைகள். படங்கள்: எக்ஸ் / எம்ஐ, யுபி, டிசி.
Updated on
1 min read

மகளிர் பிரீமியர் லீக்கின் கடைசி போட்டியில் யுபி வாரியர்ஸ் அணியும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் மோதவிருக்கின்றன.

பிளே ஆப்ஸுக்கு முன்னேறும் வாய்ப்பு மூன்று அணிகளுக்குமே இருக்கிறது என்பதால் கடைசி போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மகளிர் பிரீமியர் லீக்கில் ஆர்சிபி அணி அதிகமான புள்ளிகளைப் பெற்று இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது.

பிளே ஆப்ஸுக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் தேர்வாகிவிட, மற்றுமொரு அணிக்கான இடம் காலியாக இருக்கிறது.

இந்த இடத்திற்கு மூன்று அணிகளுக்குமே வாய்ப்பு இருப்பதால் கடைசி போட்டியில் யார், எவ்வளவு ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெருவார்கள் என்று சுவாரசியம் அதிகரித்துள்ளது.

தில்லி அணி வெறுமனே வென்றால், பிளே ஆப்ஸுக்குத் தேர்வாகும். ஒருவேளை யுபி வாரியர்ஸ் வென்றால் பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

யுபி வாரியர்ஸ் மிகப்பெரிய ரன் ரேட்டில் வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குத் தேர்வாகும்.

கடைசி ஓவர் அல்லது குறைவான ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மும்பை அணி அடுத்த சுற்றுக்குத் தேர்வாகும் என்பது கவனிக்கத்தக்கது.

மகளிர் பிரீமியர் லீக் புள்ளிப் பட்டியல்

1. ஆர்சிபி : 12 புள்ளிகள் (இறுதிப் போட்டிக்குத் தகுதி)

2. குஜராத் ஜெயண்ட்ஸ் : 10 புள்ளிகள் (பிளே-ஆப்ஸுக்குத் தகுதி)

3. மும்பை இந்தியன்ஸ் : 6 (+0.059) புள்ளிகள்

4. தில்லி கேபிடல்ஸ் : 6 (-0.164) புள்ளிகள்

5. யுபி வாரியர்ஸ் : 4 (-1.146) புள்ளிகள்

Players from the Mumbai, UP, and Delhi teams.
அரையிறுதிக்கான போட்டியில் இந்தியா - பாகிஸ்தான்..! சூடுபிடிக்கும் யு19 உலகக் கோப்பை!
Summary

In the last match of the Women's Premier League, the UP Warriorz and Delhi Capitals teams will be facing each other.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com