/

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இந்திய ஒருநாள் அணியில் இணைந்த ஷிவம் துபே!

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இந்திய ஒருநாள் அணியில் இணைந்த ஷிவம் துபேவைப் பற்றி...

News image

ஷிவம் துபே. - படம்: பிசிசிஐ

Updated On :7 ஜூலை 2026, 5:36 pm IST

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக சிவம் துபே சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்விரு அணிகளும் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி வருகிற ஜூலை 14 ஆம் தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது. ஆப்கானிஸ்தான் தொடருக்குப் பின்னர் இந்திய அணியின் நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இவரும் சேர்ந்து களமிறங்க உள்ளதால் இந்தத் தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இந்த நிலையில், காயம் காரணமாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் விளையாடாத ஆல்-ரவுண்டர் நிதீஷ்குமார் ரெட்டி, குணமடைந்து வருவதால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவர் விளையாடவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால், அவருக்குப் பதிலாக இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷிவம் துபே ஒருநாள் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பையை இரண்டு முறை வென்ற அணிகளில் இடம்பெற்றிருந்த ஷிவம் துபே, கடைசியாக 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் இலங்கையின் கொழும்புவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒருநாள் அணிக்கு அழைப்பட்டுள்ளார். இதுவரை நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள துபே, 43 ரன்களையும், ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.

ஜூலை 16-ல் கார்டிஃப் மற்றும் ஜூலை 19-ல் லார்ட்ஸில் ஒருநாள் போட்டிகள் நடைபெறுகின்றன. அதனைத் தொடர்ந்து ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணி, ஜூலை 23, 25, 26 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகள் ஹராரே திடலில் நடைபெறுகின்றன.

இந்திய அணி விவரம்: ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, பிரஷித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குர்னூர் ப்ரார் மற்றும் ஷிவம் துபே.

Summary

Seam-bowling all-rounder Shivam Dube has been drafted into India's squad as a replacement for injured Nitish Kumar Reddy for the upcoming three-match ODI series against England, starting on July 14 in Birmingham.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.