நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

சர்வதேச கிரிக்கெட்டில் வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி வரலாறு படைத்துள்ளார்.

News image

வைபவ் சூர்யவன்ஷி - படம் | பிசிசிஐ

Updated On :24 ஜூலை 2026, 4:05 pm IST

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி வரலாறு படைத்துள்ளார்.

இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான முதல் டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நேற்று (ஜூலை 23) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி அரைசதம் விளாசி அசத்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் இது அவரது முதல் அரைசதமாகும். அதிரடியாக விளையாடிய அவர் 19 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

நேற்றையப் போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் அரைசதம் விளாசிய வீரர் என்ற வராற்றுச் சாதனையை படைத்தார் வைபவ் சூர்யவன்ஷி. முன்னதாக, கடந்த 1989 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சச்சின் டெண்டுகல்கர் 16 வயதில் அரைசதம் விளாசியதே சாதனையாக இருந்தது. இதனை தற்போது சூர்யவன்ஷி முறிடியடித்துள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷிக்கு வயது 15 என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Young Indian cricketer Vaibhav Suryavanshi has made history in international cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.