ஆப்கானிஸ்தான் அணியினர் இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுலின் விக்கெட்டை ரிவிவ் எடுக்க தவறியதால், அவர் அரைசதத்தை கடந்து விளையாடிவருகிறார்.
முல்லான்பூரில் நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்தப் போட்டியில் 10.1ஆவது ஓவரில் ஜியாவுர் ரஹ்மான் ஷரீஃபி வீசிய பந்தில் கே.எல். ராகுலின் பேட்டின் முனையில் பந்து பட்டு கீப்பரால் பிடிக்கப்பட்டது. தொடக்கத்தில் விக்கெட்டுக்கு கோரிக்கை விடுத்த ஆப்கானிஸ்தான் அணியினர் நடுவர் விக்கெட் கொடுக்காததால் அமைதியாகிவிட்டனர்.
பின்னர் ரீப்ளேவில் அந்தக் காட்சிகள் வெளியானபோது, பந்து பேட்டில் பட்டது அல்ட்ராஎட்ஜில் உறுதியானது. அப்போது 16 ரன்களில் இருந்த கே.எல். ராகுல் தற்போது அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 31 ஓவர்கள் முடிவில் 121/1 ரன்கள் குவித்துள்ளது. கே.எல். ராகுல் 52, சாய் சுதர்சன் 42 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.
பிசிசிஐ ஏமாற்றிவிட்டதாக கிரிக்கெட் ரசிகர்கள் இதனை விமர்சித்து வருகிறார்கள். நடுவர்கள் சில நேரங்களில் இது மாதிரியான தீர்ப்புகளை வழங்குவது சர்ச்சையை ஏற்படுத்துகிறது. அதனால்தான் ரிவிவ் நடைமுறை கொண்டுவரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Rahul confused the AFG team and made them believe it was his bat's sound. Well Played Rahul ð https://t.co/enVYHa7AKe pic.twitter.com/OaWR4MrhLu
— Varun (@The_MythBreaker) June 6, 2026
Summary
KL Rahul edged it, but the visitors chose not to review and let a crucial chance slip away
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தில்லியில் போராட்டம் நடத்திய மாணவா் மீது ‘பெல்லட்’ துப்பாக்கிச்சூடு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தில்லியில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்! ராகுல் காந்தியின் பேரணி தடுத்து நிறுத்தம்!

கொந்தளிக்கும் தில்லி... கைது செய்யப்பட்ட ராகுலின் மூக்கில் ரத்தம் கசிந்ததால் பரபரப்பு!

இந்தியா பந்துவீச்சு: மூத்த வீரர்களான ரோஹித், கோலி, கே.எல். ராகுல் சேர்ப்பு!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


