பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

பெத் மூனி, ஆஷ்லி கார்ட்னர் அரைசதம்: ஆஸி. மகளிரணி 219 ரன்கள் குவிப்பு!

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் பேட்டிங்கில் அசத்திய ஆஸ்திரேலியா குறித்து...

Beth Mooney, left, and Ashleigh Gardner of Australia celebrate a 100 partnership during the Women's T20 World Cup match between Australia and Netherlands in Southampton, England, Saturday June 20, 2026. (Andrew Matthews/PA via AP)

பெத் மூனி - ஆஷ்லி கார்ட்னர் தங்களது 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பின்போது... - படம்: ஏபி

Published On :

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிராக பேட்டிங்கில் அசத்திய ஆஸ்திரேலிய மகளிரணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்துள்ளது.

இந்த ஆஸி. மகளிரணியில் அதிகபட்சமாக பெத் மூனி 74 ரன்கள் எடுத்தார். பின்னர், இவர் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.

சௌதாம்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நெதர்லாந்து டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதில் ஆஸி. அணி மிக அதிரடியாக பேட்டிங் செய்து 220 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

தொடக்க வீராங்கனை பெத் மூனி 42 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து காயம் காரணமாக ரிடையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். எல்லீஸ் பெர்ரி 1 ரன்னுக்கு ஆட்டமிழக்க ஆஷ்லி கார்ட்னர் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஜார்ஜியா வார்ஹேம் 18 பந்துகளில் 41 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியில் அன்னாபெல் சதர்லேண்டு 6 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார்.

நெதர்லாந்து சார்பில் ஐரிஸ் ஸ்வில்லிங் 3 விக்கெட்டுகளை எடுத்தார். கரோலின் 2 விக்கெட்டுகள் எடுத்தார். இரண்டு போட்டிகளிலுமே தோல்வியுற்றுள்ள நெதர்லாந்து முதல் வெற்றியை எதிர்பார்த்திருக்கிறது.

Summary

Beth Mooney, Ashleigh Gardner fifty makes Australia Women 219 runs in T20 World Cup

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.