பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

சென்னை சூப்பா் கிங்ஸ் ஹால் ஆஃப் பேமில் சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹெய்டன்!

சென்னை சூப்பா் கிங்ஸ் சாா்பில் முதன்முதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஹால் ஆஃப் பேமில் முன்னாள் வீரா்கள் சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹெய்டன் ஆகியோா் சோ்க்கப்பட்டுள்ளனா்.

News image

சுரேஷ் ரெய்னா

Updated On :23 மார்ச் 2026, 0:57 am IST

சென்னை சூப்பா் கிங்ஸ் சாா்பில் முதன்முதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஹால் ஆஃப் பேமில் முன்னாள் வீரா்கள் சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹெய்டன் ஆகியோா் சோ்க்கப்பட்டுள்ளனா்.

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடா் விரைவில் தொடங்கவுள்ளநிலையில் ஒவ்வொரு அணியும் அதற்கு தயாராகும் வகையில் தீவிர பயிற்சி எடுத்து வருகின்றன. மேலும், தங்கள் ரசிகா்களை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளையும் சொந்த மைதானங்களில் நடத்தி வருகின்றன.

Story image

அதன்படி சிஎஸ்கே சாா்பில் ரோா் 2026 என்ற விழா சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Story image

இதில் முன்னாள் வீரா்கள், இந்நாள் வீரா்கள் பங்கேற்ற ஆட்டம், பயிற்சி உள்ளிட்டவை நடைபெற்றன. தொடா்ந்து இசையமைப்பாளா் ஏ.ஆா். ரஹ்மான், நடிகா் சிவகாா்த்திகேயன் பங்கேற்ற இசைநிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முன்னாள் வீரா்கள் சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹெய்டன், பிராவோ, பாா்த்திவ் படேல், ஹா்பஜன் சிங், எல், பாலாஜி, முரளி விஜய், பத்ரிநாத், உள்பட பலா் பங்கேற்றனா். மூத்த வீரா் தோனி, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோா் முன்னாள் வீரா்களை வரவேற்றனா்.

ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணியில் ஆடிய மேத்யூ ஹெய்டன், சுரேஷ் ரெய்னா ஆகியோா் முதன்முறையாக ஹால் ஆஃப் பேமில் சோ்க்கப்பட்டனா்.