திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

8 பந்துகளில் 6 சிக்ஸர்கள்; அதிவேக அரைசதம் விளாசி உர்வில் படேல் சாதனை!

ஐபிஎல் தொடரில் லக்னௌவுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய உர்வில் படேல் அதிவேக அரைசதம் விளாசி அசத்தினார்.

News image

அரைசதம் விளாசிய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய உர்வில் படேல் - படம் | ஐபிஎல் (எக்ஸ்)

Updated On :54 நிமிடங்கள் முன்பு

ஐபிஎல் தொடரில் லக்னௌவுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய உர்வில் படேல் அதிவேக அரைசதம் விளாசி அசத்தினார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 203 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடி வருகிறது.

அதிவேக அரைசதம் விளாசிய உர்வில் படேல்!

204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் களமிறங்கினர். சஞ்சு சாம்சன் அதிரடியாக 14 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுடன் உர்வில் படேல் ஜோடி சேர்ந்தார்.

உர்வில் படேல் களமிறங்கியது முதலே சிக்ஸர் மழை பொழியத் தொடங்கினார். அதிரடியாக விளையாடிய அவர் ஆவேஷ் கான் பந்துவீச்சில் தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்கள் விளாசி அசத்தினார். அடுத்து திக்வேஷ் சிங் ரதி வீசிய அடுத்த ஓவரிலும் மூன்று சிக்ஸர்களை விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 13 பந்துகளில் அரைசதம் விளாசி ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சாதனையை சமன் செய்துள்ளார்.

அதிரடியாக விளையாடிய உர்வில் படேல் 23 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். அவர் ஷபாஸ் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஐபிஎல் வரலாற்றில் முதல் 8 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர் என்ற தனித்துவமான சாதனையையும் அவர் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Playing aggressively in the IPL match against Lucknow, Urvil Patel dazzled by smashing a blistering half-century.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.