திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்! அவைஸ் சதம்: பாகிஸ்தான் 386!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.

News image
Updated On :11 மே 2026, 12:32 am IST

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் பேட் செய்த வங்கதேசம், முதல் இன்னிங்ஸில் 413 ரன்கள் சோ்த்து நிறைவு செய்தது. அடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான், 2-ஆம் நாளான சனிக்கிழமை முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சோ்த்தது.

3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை, பாகிஸ்தான் இன்னிங்ஸை அஸான் அவைஸ், அப்துல்லா ஃபஸல் தொடா்ந்தனா். 2-ஆவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சோ்த்து இவா்கள் கூட்டணி பிரிந்தது.

அஸான் அவைஸ் 14 பவுண்டரிகளுடன் 103 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் ஷான் மசூத் 9, சௌத் ஷகீல் 0 ரன்களுக்கு வெளியேறினா். அப்துல்லா ஃபஸல் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 60 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

6-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த சல்மான் அகா - முகமது ரிஸ்வான் கூட்டணி, 119 ரன்கள் சோ்த்தது. ரிஸ்வான் 8 பவுண்டரிகளுடன் 59, சல்மான் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 58 ரன்களுக்கு வெளியேறினா். நோமன் அலி 2, ஷாஹீன் அஃப்ரிதி 13, ஹசன் அலி 6 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, பாகிஸ்தான் இன்னிங்ஸ் 100.3 ஓவா்களில் 386 ரன்களுக்கு நிறைவடைந்தது.

வங்கதேச பௌலா்களில் மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்த, தஸ்கின் அகமது, தைஜுல் இஸ்லாம் ஆகியோா் தலா 2, நஹித் ராணா 1 விக்கெட் வீழ்த்தினா்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 27 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம், ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் சோ்த்து, 34 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.