பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

வங்கதேசம் 179 ரன்கள் முன்னிலை!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேசம் 179 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது. ஆட்டத்தில் இன்று (மே 12) கடைசி நாள் என்பதால், இந்த டெஸ்ட் டிராவில் முடியும் எனத் தெரிகிறது.

News image

வங்கதேசம் - ICC

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேசம் 179 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது. ஆட்டத்தில் இன்று (மே 12) கடைசி நாள் என்பதால், இந்த டெஸ்ட் டிராவில் முடியும் எனத் தெரிகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 413 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. தனது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான், 386 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் 27 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம், 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்திருந்தது. மஹ்முதுல் ஹசன் ஜாய், ஷத்மன் இஸ்லாம் ஆகியோர் அணியின் இன்னிங்ஸை, திங்கள்கிழமை தொடர்ந்தனர்.

இதில் மஹ்முதுல் 5, ஷத்மன் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அடுத்து இணைந்த மோமினுல் ஹக் - கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ, 3-ஆவது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தனர்.

அரை சதம் கடந்த மோமினுல் 4 பவுண்டரிகளுடன் 56 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். 4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் சேர்த்து, மொத்தமாக 179 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

நஜ்முல் 58, முஷ்ஃபிகர் ரஹிம் 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிதி, முகமது அப்பாஸ், ஹசன் அலி ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.