
புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை தவறவிட்ட சன்ரைசர்ஸ்; பயிற்சியாளர் கூறியதென்ன?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றபோதிலும், சன்ரைசர்ஸ் அணியால் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்க முடியவில்லை.

அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் - படம் | AP
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றபோதிலும், சன்ரைசர்ஸ் அணியால் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்க முடியாதது குறித்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ஆர்சிபியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
பெங்களூருவுக்கு எதிராக அபார வெற்றி பெற்றபோதிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் நிறைவு செய்ய முடியவில்லை. 14 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என மூன்று அணிகளுமே 18 புள்ளிகள் பெற்றுள்ளபோதிலும், ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளின் ரன்ரேட் ஹைதராபாதைக் காட்டிலும் அதிகமாக இருந்ததால் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தன.
Top 3ï¸â£ separated by the barest of margins ð«£
— IndianPremierLeague (@IPL) May 22, 2026
One golden ticket remains. Who's cashing in? ðï¸â¨#TATAIPL | #KhelBindaas pic.twitter.com/dgGJSmaukg
இந்த நிலையில், சன்ரைசர்ஸ் அணியால் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்க முடியாதது குறித்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நாங்கள் நன்றாக விளையாடினோம். அணியில் உள்ள வீரர்கள் மிகவும் நம்பமுடியாத அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதாக நினைக்கிறேன். இந்த சீசன் இன்னும் முடியவில்லை. ரன்ரேட் காரணமாக புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால், இந்த தொடரில் 9 வெற்றிகள் பெற்றுள்ளது மிகவும் அற்புதமாக விஷயம்.
எங்கள் அணியில் உள்ள மிடில் ஆர்டர் பேட்டர்கள் நிறைய நேரம் களத்தில் நின்று விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. மிடில் ஆர்டர் நன்றாக செயல்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். ஆனால், ஒரு அணியாக நாங்கள் அனைவரும் நன்றாக செயல்பட்டுள்ளோம். எங்களது டாப் ஆர்டர் பேட்டர்கள் வலுவாக உள்ளார்கள். அதேபோல, பந்துவீச்சிலும் நாங்கள் வலுவாக உள்ளோம் என்றார்.
Summary
Despite winning the match against Royal Challengers Bangalore, the Sunrisers team was unable to secure a spot in the top two of the points table.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







