பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

முதல் பிளே-ஆஃப்ஸ் போட்டி: பேட்டிங்கின் அனைத்து விருதுகளையும் பெற்ற சூர்யவன்ஷி!

எலிமினேட்டர் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி பெற்ற விருதுகள் குறித்து...

Vaibhav Suryavanshi with his awards.

விருதுகளுடன் வைபவ் சூர்யவன்ஷி. - படங்கள்: எக்ஸ் / ஐபிஎல்

Published On :

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது முதல் முதல் பிளே-ஆஃப்ஸ் போட்டியிலேயே பேட்டிங்கின் அனைத்து விதமான விருதுகளையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

நேற்றிரவு (மே.27) நடந்த எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 243/8 ரன்கள் எடுக்க, அடுத்து விளையாடிய சன்ரைசர்ஸ் 19.2 ஓவர்களில் 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 5 பவுண்டரிகள், 12 சிக்ஸர்கள் அடித்திருந்தார்.

இந்தப் போட்டியில் சூர்யவன்ஷியின் ஸ்டிரைக் ரேட் 334.48 ஆக இருந்தது. இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவராக சூர்யவன்ஷி 680 ரன்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். இதன் மூலம் ஆரஞ்சு கேப் விருதையும் வென்றுள்ளார்.

இந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி பெற்ற விருதுகள் விபரம்: சூப்பர் சிக்ஸர் (அதிக சிக்ஸர்கள்), சூப்பர் ஃபோர் (அதிக பவுண்டரிகள்), சூப்பர் ஸ்டிரைக் ரேட் (சிறந்த ஸ்டைரைக் ரேட்), ஆட்ட நாயகன் விருதுகள் என் நான்கையும் பெற்றார்.

இந்த நான்கு விருதுகளுடன் ஆரஞ்சு கேப் விருதையும் வென்றார். தான் விளையாடிய முதல் பிளே-ஆஃப்ஸ் போட்டியிலேயே பேட்டிங்கிற்கென வழங்கப்படும் அனைத்து விருதுகளையும் பெற்று அசத்தியுள்ளார்.

Summary

Vaibhav Sooryavanshi won all the batting awards in his first Knock out match in IPL

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.