பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்! அதிமுக இரு தரப்பு மனுக்கள் மீது நாளை முடிவு! பேரவைத் தலைவர் அதிமுகவிலிருந்த கருத்து வேறுபாடு நீங்கிவிட்டது! பதவி ஆசை இல்லை! எஸ்.பி. வேலுமணி தில்லியில் முதல்வர் ஜோசப் விஜய்க்கு வரவேற்பு!கர்நாடக முதல்வர் சித்தராமையா நாளை ராஜிநாமா? குண்டர் தடுப்புச் சட்ட ரத்து வழக்கு! உயர் நீதிமன்றத்தில் காத்திருக்கும் முன்னாள் காவல் ஆணையர் அருண்!இணையும் அதிமுக: இபிஎஸ்ஸுடன் எஸ்.பி. வேலுமணி சந்திப்பு!பைஜுஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை!பினராயி விஜயன் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
/

டி20 போட்டியில் 200 ரன்கள் அடிக்க வேண்டும்: வைபவ் சூர்யவன்ஷி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து...

News image

வைபவ் சூர்யவன்ஷி. - படம்: ஏபி

Updated On :27 மே 2026, 4:31 pm IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயதான் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, “டி20 போட்டிகளில் 200 ரன்கள் அடிக்க வேண்டும் என்பது எனது கனவாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்றிரவு 7.30 மணிக்கு முல்லான்பூரில் எலிமினேட்டர் ஆட்டத்தில் விளையாடுகின்றன. இந்தப் போட்டியில் வெல்லும் அணி குவாலிஃபயர் 2 போட்டிக்கு முன்னேறும் என்பது கவனிக்கத்தக்கது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி நடப்பு ஐபிஎல் தொடரில் அந்த அணியிலேயே அதிக ரன்கள் (583) குவித்தவராக இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெயில் அதிகபட்சமாக 175 ரன்கள் குவித்துள்ளார். இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் உடனான கலந்துரையாடலின்போது சூர்யவன்ஷி கூறியிருப்பதாவது:

டி20 போட்டிகளில் 200 ரன்கள் அடிக்க வேண்டும். கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்து 200 ரன்கள் குவிக்க வேண்டும். எந்தப் போட்டியிலும் நான் 20 ஓவர்கள் விளையாடினால் கெயின் சாதனையை முறியடிப்பேன் என்றார்.

ஏற்கெனவே, சூர்யவன்ஷி டி20 போட்டிகளில் 144 ரன்கள் குவித்துள்ளார். யு-19 உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் அதிகபட்சமாக 332 ரன்கள் குவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Summary

I want to score 200 runs in an IPL or T20 match: Vaibhav Sooryavanshi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.