ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி வரும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தொடர்ச்சியாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்து வருகிறார். சர்வதேச அளவில் மிகவும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக துளியும் அச்சமின்றி அவர் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள வைபவ் சூர்யவன்ஷி, 579 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு அதிகம் வாய்ப்பிருப்பதால், அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வெல்வதற்கு சூர்யவன்ஷிக்கு அதிக வாய்ப்பிருக்கிறது.
இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை வைபவ் சூர்யவன்ஷி 53 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். ஐபிஎல் தொடர் ஒன்றில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் தன்வசம் வைத்துள்ளார். ஐபிஎல் சீசன் ஒன்றில் அவர் 59 சிக்ஸர்கள் விளாசி சாதனை படைத்துள்ளார். கிறிஸ் கெயிலின் இந்த சாதனையை முறியடிக்க வைபவ் சூர்யவன்ஷிக்கு இன்னும் 7 சிக்ஸர்கள் மட்டுமே தேவைப்படுகின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதன் கடைசி லீக் ஆட்டத்தில் நாளை (மே 24) மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Expectations have arisen as to whether Vaibhav Suryavanshi—who has been playing aggressively for the Rajasthan Royals in the ongoing IPL season—will break the record held by former West Indies player Chris Gayle.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வித்தியாசமான கொண்டாட்டத்துக்குக் காரணம் அம்மாதான்... மனம் திறந்த சூர்யவன்ஷி!

உலக சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!
சிவப்புப் பந்து போட்டிகளில் சூர்யவன்ஷி விளையாட வேண்டும்: அஸ்வின்

ஏலத்தில் எடுக்கப்பட்டபோது என்னுடைய நோக்கம் இதுதான்: வைபவ் சூர்யவன்ஷி
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher




