யமால், ரபீனியா, ஃபெர்மின் அசத்தல்: அபார வெற்றியுடன் முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!
லா லிகா கால்பந்துத் தொடரில் மீண்டும் அபார வெற்றியைப் பதிவு செய்த பார்சிலோனா குறித்து...

லமின் யமால், ரபீனியா, ஃபெர்மின் லோபஸ் - படங்கள்: எக்ஸ் / பார்சிலோனா
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்துத் தொடரில் நடப்பு சாம்பியனான பார்சிலோனா 6-1 என்ற கோல் கணக்கில் வென்று, அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இந்த வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் தனது முதலிடத்தையும் தக்கவைத்துள்ளது. அத்லெடிகோ மாட்ரிட் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் இரண்டாமிடத்தில் வகிக்கிறது.
பார்சிலோனா அணி தனது சொந்த மண்ணில் அலாவெஸ் உடன் மோதியது. இதில் ரபீனியா (8’,41’), லமின் யமால் (45+1’, 64’) என தலா 2 கோல்கள் அடித்தார்கள்.
இவர்களுடன் சேர்ந்து ஃபெர்மின் லோபஸ் (23’), ஆண்டனி கோர்டன் (81’) தலா 1 கோல் அடித்து அசத்தினார்கள். அலாவெஸ் அணிக்கு 84ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் அடிக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் 77 சதவிகித நேரம் பந்தை தனது கட்டுப்பாட்டுகள் வைத்திருந்த பார்சிலோனா 822 பாஸ்களை 91 சதவிகித துல்லியத்துடன் செய்து அசத்தினார்கள்.
இந்தப் போட்டியில் 2 அசிஸ்ட், ஒரு கோல் அடித்த ஃபெர்மின் லோபஸ் ஆட்ட நாயகன் விருது வென்றார். பார்சிலோனா முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
லா லிகா புள்ளிப் பட்டியல்
1. பார்சிலோனா - 30 புள்ளிகள்
2. அத்லெடிகோ மாட்ரிட் - 28 புள்ளிகள்
3. ரியல் மாட்ரிட் - 24 புள்ளிகள்
4. ரியல் பெட்டிஸ் - 23 புள்ளிகள்
5. ரியல் சொசைடாட்- 19 புள்ளிகள்
6. செவில்லா - 17 புள்ளிகள்
Goals galore at home. pic.twitter.com/WOpa6QD7XS
— FC Barcelona (@FCBarcelona) October 31, 2026
Summary
Lamine Yamal and Raphinha both scored twice as Barcelona bounced back from their El Clasico defeat and returned to the top of La Liga with an emphatic 6-1 win over Alaves.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

