நான் நம்பியதைவிட பல மடங்கு சாதனைகளைப் படைத்தவர் தோனி! சச்சின் புகழாரம்!
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த மகேந்திர சிங் தோனிக்கு சச்சின் புகழாரம்...

சச்சினுடன் தோனி - photo: x | Sachin
கிரிக்கெட்டிலிருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு அறிவித்திருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஏற்கெனவே ஓய்வுபெற்ற தோனி, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் விளையாடி வந்த நிலையில், தற்போது ஐபிஎல்லில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
தொடர்ந்து, சிஎஸ்கே அணியின் ஆலோகராக தோனி பணியாற்றவுள்ள நிலையில், சக வீரர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் தோனியைப் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் வெளியிட்டிருக்கும் பதிவில்,
”வங்கதேசத்தில் எம்.எஸ். பேட்டிங் செய்ததைப் பார்த்தபோது, அவர் பந்தை அடிக்கும் திறனில் ஏதோ ஒரு தனிச்சிறப்பு இருப்பதை உணர்ந்து, அதை சௌரவிடம் கூறியது இன்னும் நினைவிருக்கிறது. அவரிடம் ஒரு அபூர்வமான திறமை இருந்தது என்பதை அப்போதே காண முடிந்தது. அவர் மேற்கொண்ட அந்தப் பயணம் எவ்வளவு மகத்தானது!
உங்களுடன் ஒரே டிரெஸ்ஸிங் ரூமைப் பகிர்ந்துகொண்டதும், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றாகப் பங்கேற்றதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. நீங்கள் ஏதோ ஒரு சிறப்பான சாதனையைச் செய்வீர்கள் என்று நான் எப்போதும் நம்பினேன்; ஆனால், நீங்கள் அதைவிடப் பல மடங்கு சாதனைகளைப் படைத்திருக்கிறீர்கள்.
இந்திய கிரிக்கெட்டுக்கு நீங்கள் உங்கள் முழுத் திறமையையும் அர்ப்பணித்திருக்கிறீர்கள். உங்களுடன் இந்தப் பயணத்தைப் பகிர்ந்துகொண்டது மிகவும் அற்புதமான அனுபவம். மிகச் சிறப்பாக விளையாடினீர்கள், எம்.எஸ்.!” என்று குறிப்பிட்டுள்ளார்.
I still remember watching MS bat in Bangladesh and telling Sourav that there was something special about his power hitting. You could see he had a rare gift, and what a journey he went on to have.
— Sachin Tendulkar (@sachin_rt) November 18, 2026
It was a real joy sharing the dressing room with you and being part of some of our⦠pic.twitter.com/k7hRJHVdF3
Summary
I always believed you would do something special, and you went on to achieve so much more - sachin
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


