4 டெஸ்ட்டில் 470 ரன்கள்... தென்னாப்பிரிக்காவின் புதிய நாயகன் மார்கஸ் ஆக்கர்மேன்!

தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியின் தொடக்க வீரர் மார்கஸ் ஆக்கர்மேன் குறித்து...

South Africa's Marques Ackerman celebrates his century on day two of the second cricket test match between South Africa and Bangladesh, in Centurion, South Africa, Tuesday, Nov. 24, 2026. (AP Photo/Themba Hadebe)

சதம் அடித்த மகிழ்ச்சியில் மார்கஸ் ஆக்கர்மேன் - படம்: ஏபி

Updated On :

தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியின் தொடக்க வீரர் மார்க்கஸ் ஆக்கர்மேன் 4 போட்டிகளில் 470 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான 30 வயதான மார்க்கஸ் ஆக்கர்மேன் சிறப்பான தொடக்கத்தை அளித்து வருகிறார்.

ஜோஹன்னஸ்பர்க்கில் பிறந்த மார்க்கஸ் ஆக்கர்மேன் 88 முதல் தர போட்டிகளில் 6,306 ரன்கள் குவித்துள்ளார். இதனால், தேசிய அணியில் இடம்கிடைத்தது.

இதுவரை நான்காவது டெஸ்ட்டில் விளையாடி வருகிறார். இதில் 470 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 78.33 ஆகவும் ஸ்டிரைக் ரேட் 91.08 ஆகவும் இருக்கின்றன. இதில் 2 சதங்கள், 2 அரைசதங்கள் அடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 95 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 62 ரன்களும் குவித்து வெற்றிக்கு வித்திட்டார். தற்போது, வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் இரண்டு சதங்கள் அடித்து மிரட்டியுள்ளார்.

இரண்டாவது டெஸ்ட்டில் வங்கதேசம் 91 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்கா 54.1 ஓவர்களில் 259/4 ரன்கள் எடுத்துள்ளது. இதில் மார்க்கஸ் ஆக்கர்மேன் 138 பந்துகளில் 150 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்க அணி 168 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

Summary

470 runs in 4 Tests... Marques Ackerman South Africa's new hero!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.