கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆசிய கோப்பை அரையிறுதி: பாகிஸ்தான் ஏ அணிக்கு 233 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்கதேசம்!

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் 232 ரன்கள் எடுத்துள்ளது.

படம் | ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (எக்ஸ்)

Updated On :

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் ஏ அணி 8 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்கள் எடுத்துள்ளது.

ஆசிய கோப்பை ரைசிங்ஸ் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரில் தோஹாவில் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ஏ மற்றும் வங்கதேசம் ஏ அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

ஷஹாதத் ஹொசைன் சதம் விளாசல்!

பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்கள் எடுத்துள்ளது.

வங்கதேச அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷஹாதத் ஹொசைன் சதம் விளாசி அசத்தினார். சிறப்பாக விளையாடிய அவர் 118 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, மஹிதுல் இஸ்லாம் 42 ரன்கள், மெஹரப் 28 ரன்கள் மற்றும் ரிப்பன் மண்டோல் 19* ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

பாகிஸ்தான் தரப்பில் சூஃபியான் மோஹிம் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அலி ராஸா மற்றும் ஹாசன் நவாஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் மற்றும் அகமது டேனியல் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் ஏ அணி களமிறங்குகிறது.

Summary

In the semi-final match against Pakistan at the Asia Cup Rising Stars cricket tournament, the Bangladesh 'A' team batted first and scored 232 runs for the loss of 8 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.