மு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

இந்திய அணியில் இல்லாதது மிகுந்த வலியைத் தருகிறது: சூர்யகுமார் யாதவ்

இந்திய அணியில் இல்லாதது மிகுந்த வலியைத் தருவதாக முன்னாள் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

Captain Suryakumar Yadav

சூர்யகுமார் யாதவ் - படம் | AP

Updated On :

இந்திய அணியில் இல்லாதது மிகுந்த வலியைத் தருவதாக முன்னாள் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மா கடந்த 2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். அவருக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான இந்திய அணி இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது.

இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த போதிலும், உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். பேட்டிங்கில் சிறப்பான ஃபார்மில் இல்லாததால் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், இந்திய அணியில் இல்லாதது மிகுந்த வலியைத் தருவதாக முன்னாள் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் தருகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியில் இடம்பெறாமலிருப்பது மிகுந்த வலியைத் தருகிறது. ஐந்து ஆண்டுகளாக இந்திய அணிக்காக தொடர்ச்சியாக விளையாடிவிட்டு திடீரென அணிக்காக விளையாடாதது வலியைத் தருகிறது. ஆனால், கிரிக்கெட்டில் இதுவும் ஒரு பகுதியே. கிரிக்கெட் பல விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கிரிக்கெட் எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. ஐபிஎல் தொடருக்குப் பிறகும் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டுள்ளேன்.

நான் ஏற்கனவே கூறியதுபோல, கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டுள்ளேன். சுரங்கத்தின் முடிவில் ஒளி எப்போதும் இருக்கும். அந்த ஒளியை அடையும் வரை பயணத்தைத் தொடர வேண்டும். ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு இன்னும் நிறைய நாள்கள் இருக்கின்றன. அதற்கிடையில், நிறைய தொடர்கள் நடைபெறவுள்ளன. முஷ்டாக் அலி கோப்பைக்குப் பிறகு, விஜய் ஹசாரே மற்றும் ரஞ்சி கோப்பை போட்டிகள் உள்ளன. தற்போது சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் கவனம் செலுத்தி வருகிறேன்.

என்னுடைய பேட்டிங்கில் தவறு செய்ததாக நான் நினைக்கவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக விளையாடியதைப் போன்றே விளையாடி வருகிறேன். இந்திய அணிக்காக விளையாடினாலும் சரி, மும்பை அணிக்காக விளையாடினாலும் சரி மிகுந்த மகிழ்ச்சியுடனேயே பேட்டிங் செய்கிறேன். தற்போதும் அதனையே செய்து வருகிறேன். பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட நிறைய பயிற்சி மேற்கொண்டுள்ளேன் என நினைக்கிறேன். கடந்த 8-10 வாரங்கள் கடினமாக பயிற்சி மேற்கொண்டுள்ளேன். கடினமாக உழைத்தால், உங்களுக்கு அதிர்ஷ்டமும் இருக்கும். எனக்கு அதிர்ஷ்டம் இருப்பதாக உணர்கிறேன். ஏனெனில், நான் கடினமாக உழைத்துள்ளேன். அதனால், என்னால் நன்றாக ரன்கள் குவிக்க முடிகிறது என்றார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சூர்யகுமார் யாதவ் தற்போது உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Former captain Suryakumar Yadav has stated that not being part of the Indian team causes him great pain.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.