ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

டி20 கிரிக்கெட்டில் அச்சமின்றி விளையாடுவதே எங்கள் நோக்கம்: ஷஃபாலி வர்மா

டி20 கிரிக்கெட்டில் அச்சமின்றி விளையாடுவதே இந்திய அணியின் நோக்கம் என துணைக் கேப்டன் ஷஃபாலி வர்மா தெரிவித்துள்ளார்.

shafali verma

ஷஃபாலி வர்மா - படம் | AP

Updated On :

டி20 கிரிக்கெட்டில் அச்சமின்றி விளையாடுவதே இந்திய அணியின் நோக்கம் என துணைக் கேப்டன் ஷஃபாலி வர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய மகளிரணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்மன்பிரீத் கௌர் அண்மையில் அவரது கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். இதனையடுத்து, அணியின் புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும், துணைக் கேப்டனாக ஷஃபாலி வர்மாவும் நியமிக்கப்பட்டனர்.

ஸ்மிருதி மந்தனா தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் இருதரப்பு தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்கள் நடைபெறவுள்ளன. முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. முதல் டி20 போட்டி நாளை (அக்டோபர் 16) ராய்பூரில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், டி20 கிரிக்கெட்டில் அச்சமின்றி விளையாடுவதே இந்திய அணியின் நோக்கம் என துணைக் கேப்டன் ஷஃபாலி வர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அடுத்தாண்டின் தொடக்கத்தில் அறிமுக சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. நாங்கள் அந்த தொடர் குறித்து ஆலோசனை செய்துள்ளோம். ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரிலிருந்து அச்சமின்றி புத்திசாலித்தனமான கிரிக்கெட்டினை விளையாடுவதே எங்களது நோக்கம். இது குறித்து நாங்கள் நிறைய ஆலோசனை செய்துவிட்டோம். அதனால், அனைவருக்கும் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். ஒவ்வொரு தொடரிலிந்தும் நாங்கள் எங்களை தொடர்ச்சியாக மேம்படுத்திக் கொண்டே வருகிறோம் என்றார்.

Summary

Vice-captain Shafali Verma said that the aim of the Indian team is to play fearlessly in T20 cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.