தனியார் வங்கி பங்கு சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 876 புள்ளிகளுடனும், நிஃப்டி 22,900க்கு கீழே சரிவு!!டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ. 94.92 ஆக நிறைவு!சென்னை வெள்ளத்தடுப்பு அறிக்கையை தாமதமின்றி வெளியிடுக! - தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்!உலக ஸ்கேட்டிங் போட்டி: பதக்கங்களை வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!ஆசிய பாரா விளையாட்டு: நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற நிஷாத் குமார்!மின்வாரியத்தில் 2,600 ஒப்பந்த ஊழியர்கள் தேர்வு! கூடுதலாக 2,400 பணியாளர்கள்! நிர்மல் குமார்ஆசிய பாரா விளையாட்டு: புதிய சாதனையுடன் முதல் தங்கம் வென்ற இந்தியா!7 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஷஃபாலி வர்மா புதிய சாதனை!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷஃபாலி வர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

படம் | பிசிசிஐ

Updated On :

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷஃபாலி வர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று (அக்டோபர் 18) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வேவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

நேற்றையப் போட்டியில் 103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 8.5 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய துணைக் கேப்டன் ஷஃபாலி வர்மா 25 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

நேற்றைய ஆட்டத்தில் 55 ரன்கள் எடுத்ததன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் ஓராண்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை ஷஃபாலி வர்மா படைத்தார். அவர் இந்த ஆண்டில் மட்டும் சர்வதேச டி20 போட்டிகளில் 922 ரன்கள் எடுத்துள்ளார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓராண்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள்

ஷஃபாலி வர்மா - 922 ரன்கள் (2026)

லாரா வோல்வர்ட் - 824 ரன்கள் (2026)

ஸ்மிருதி மந்தனா - 821 ரன்கள் (2026)

நடாஷா மைல்ஸ் - 800 ரன்கள் (2026)

ஈஷா ஓஷா - 779 ரன்கள் (2025)

யாஷ்மின் தஸ்வானி - 779 (2026)

Summary

Indian team vice-captain Shafali Verma has set a new record in international T20 cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.