பலத்த மழை: முதல்வர் விஜய்யின் கேரள பயணம் ரத்துதிருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!அரசாணைகளை ஒளித்து வைப்பது ஏன்? முதல்வருக்கு உதயநிதி கேள்வி!நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கை

அர்ஷ்தீப் சிங் காயம்: இந்திய டி20 அணியில் புவனேஷ்வர் குமார்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி டி20க்கான இந்திய அணியில் இணைந்துள்ள புவனேஷ் பற்றி...

Bhuvneshwar Kumar, Arshdeep Singh

புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் - படம்: பிசிசிஐ

Updated On :

பெங்களூரில் நடைபெற இருக்கும் ஐந்தாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் இணைக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங் தோள்பட்டை காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-2 என சமநிலையில் இருக்கிறது. பெங்களூரில் நாளை இரவு 7 மணிக்கு நடக்கும் கடைசி போட்டியில் புவனேஷ் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசி போட்டியில் இந்தியா வெல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது. பிளேயிங் லெவனில் புவனேஷ் விளையாடுவாரா என்பது நாளைதான் தெரியவரும்.

இந்திய அணி: ஷ்ரேயாஸ் ஐயர், அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், அக்ஷர் படேல், ரவி பிஷ்னோய், நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ், புவனேஷ்வர் குமார்.

Summary

Arshdeep Singh sustains blow to bowling shoulder; Bhuvneshwar Kumar added to the squad for the Bengaluru T20I

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.