மதுரை பிரபல நகைக் கடையில் 500 சவரன் கொள்ளை!9.5 சிஜிபிஏ மாணவர்களுக்கு திருப்பதியில் இலவச தரிசனம்! விநோத அறிவிப்பை வெளியிட்ட கல்லூரிபுதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து! 22 பயணிகள் காயம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை! பண்டிகை நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட முடிவு?ஜம்முவில் காணாமல்போன சிறப்பு காவல் அதிகாரிகள் சடலமாக மீட்பு!நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!சம்பா நெற்பயிா்க் காப்பீட்டு காலவரம்பு டிச. 1 வரை நீட்டிப்புஉபோ் செயலியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படாது!

காதலியுடன் நிச்சயதார்த்தம்... வைரலாகும் அர்ஷ்தீப் சிங்கின் புகைப்படங்கள்!

இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங், சம்ரீன் கௌருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதைப் பற்றி...

சம்ரீன் கௌருடன் அர்ஷ்தீப் சிங். - @Arshdeep Singh

Updated On :

இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங், நடிகையும் அவருடையாக காதலியுமான சம்ரீன் கௌருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

Story image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் அர்ஷ்தீப் சிங். இவர், ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் தனது சிறப்பான பந்துவீச்சால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அர்ஷ்தீப் சிங், கடந்த 2024, 2026-ஆம் ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று, வெற்றிக்கு முக்கிய பங்காற்றியிருந்தார்.

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த அர்ஷ்தீப் சிங், தற்போது டிரேடிங் முறையில் மும்பை அணிக்கு மாற்றப்பட்டு, வருகிற 2027 ஐபிஎல் தொடரிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவிருக்கிறார்.

Story image

இதற்கிடையில், நடிகையும், மாடலுமான சம்ரீன் கௌரை அர்ஷ்தீப் சிங் காதலித்து வந்தார். இருவரும் தங்களது காதல் குறித்த தகவலை கடந்த ஜூலை மாதம் சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்திருந்தனர்.

Story image

இந்த நிலையில், அர்ஷ்தீப் சிங் - சம்ரீன் கௌர் ஜோடி நேற்று (நவ. 11) நியூசிலாந்தில் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். இந்திய அணியுடன் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அர்ஷ்தீப்புடன் சம்ரீன் கௌர் இருவரும் கடற்கரைப் பகுதியில் மோதிரம் அணிவித்து கொண்ட புகைப்படங்களை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

Story image

ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த நடிகை சம்ரீன் கௌர் 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக இடம்பெற்றார். ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான 83, சர்தார் ஜி 2 உள்ளிட்ட படங்களிலும், 'நெயில் பாலிஷ்' இணையத் தொடரிலும் நடித்துள்ளார்.

நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ள ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில், இவர்களின் திருமணத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

India fast bowler Arshdeep Singh has announced his engagement to actor-model Samreen Kaur, sharing pictures of the proposal on social media as the couple celebrated a new chapter in their relationship.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.