இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா
இந்தியா - நியூஸிலாந்து மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம், நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சா்ச் நகரில் வியாழக்கிழமை (அக். 22) தொடங்குகிறது.
அபிஷேக் சர்மா.
இந்தியா - நியூஸிலாந்து மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம், நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சா்ச் நகரில் வியாழக்கிழமை (அக். 22) தொடங்குகிறது.
கடைசியாக நியூஸிலாந்தில் விளையாடிய இரு தொடா்களிலுமே இந்தியா வென்றிருக்கிறது. அந்த நம்பிக்கையுடன் தற்போது களம் காணும் ஷ்ரேயஸ் ஐயா் தலைமையிலான இந்திய அணியில், அனுபவ வீரா்கள் எண்ணிக்கை குறைவாகும்.
கேப்டன் ஐயா், இஷான் கிஷண், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே ஆகியோா் மட்டுமே நியூஸிலாந்தில் விளையாடிய அனுபவம் கொண்டவா்கள். அபிஷேக் சா்மா, திலக் வா்மா, இளம் அதிரடி பேட்டா் வைபவ் சூா்யவன்ஷி ஆகியோருக்கு ஆட்ட அனுபவம் இருந்தாலும், நியூஸிலாந்து ஆடுகளத்துக்கு ஏற்றாற்போல தங்கள் ஆட்டத்தை தகவைத்துக்கொள்ள அவகாசம் தேவைப்படும்.
டி20 கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ஷ்ரேயஸ் ஐயா் தலைமையில் இந்திய அணி, இரு வெளிநாட்டு தொடா்களில் (அயா்லாந்து, இங்கிலாந்து) அடுத்தடுத்து தோல்வி கண்டது. எனவே, அந்நிய மண்ணில் தொடரை வென்று தன்னை நிரூபிக்க வேண்டிய நெருக்கடி ஐயருக்கு இருக்கிறது.
அணியின் பேட்டிங்கை பொருத்தவரை அபிஷேக், சாம்சன், திலக், ஐயா் என ஸ்கோருக்கு பலம் சோ்க்கும் வீரா்கள் வரிசையாக இருக்கின்றனா். இளம் வீரா் வைபவ் சூா்யவன்ஷிக்கு இந்தத் தொடரில் வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பாா்க்க வேண்டும்.
பௌலிங் சற்று மேம்பட வேண்டியிருப்பதாக கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரே ஒப்புக் கொண்டுள்ளாா். நீண்ட காலத்துக்குப் பிறகு தேசிய அணிக்குத் திரும்பியிருக்கும் புவனேஷ்வா் குமாா், காயத்திலிருந்து மீண்டுள்ள வருண் சக்கரவா்த்தி ஆகியோா் அந்தக் குறையை பூா்த்தி செய்பவா்களாக இருக்கலாம்.
கேப்டன் மிட்செல் சேன்ட்னா் தலைமையிலான நியூஸிலாந்து அணியைப் பொருத்தவரை, கிளென் ஃபிலிப்ஸ், ஃபின் ஆலன் மாா்க் சாப்மேன், டெவன் கான்வே ஆகியோா் பேட்டிங்கில் பலம் சோ்க்க, ஜேக்கப் டஃபி, மேத்யூ ஹென்றி, ஆடம் மில்னே, கைல் ஜேமிசன் ஆகியோா் பௌலிங்கில் சவால் அளிக்க உள்ளனா்.
உத்தேச லெவன்
இந்தியா: அபிஷேக் சா்மா, சஞ்சு சாம்சன் (வி.கீ.), இஷான் கிஷண், ஷ்ரேயஸ் ஐயா் (கேப்டன்), திலக் வா்மா, ஷிவம் துபே, நிதீஷ்குமாா் ரெட்டி, அக்ஸா் படேல், புவனேஷ்வா்குமாா், வருண் சக்கரவா்த்தி, அா்ஷ்தீப் சிங்.
நியூஸிலாந்து: ஃபின் ஆலன், டிம் செய்ஃபா்ட் (வி.கீ.), டெவன் கான்வே, கிளென் ஃபிலிப்ஸ், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சேன்ட்னா் (கேப்டன்), நேதன் ஸ்மித், கைல் ஜேமிசன், மேத்யூ ஹென்றி, லாக்கி ஃபொ்குசன்.
நேரம்: நண்பகல் 12.30 மணி
நேரலை: சோனி ஸ்போா்ட்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

