க்ளென் பிலிப்ஸ், பெவோன் ஜேக்கப்ஸ் அரைசதம்: இந்தியாவுக்கு 181 ரன்கள் இலக்கு!
இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டி குறித்து...

க்ளென் பிலிப்ஸ் - பெவோன் ஜேக்கப்ஸ் - படம்: எக்ஸ் / பிளாக் கேப்ஸ்
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 180/5 ரன்கள் குவித்துள்ளது.
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதிகபட்சமாக நியூசிலாந்து அணியில் க்ளென் பிலிப்ஸ் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்தப் போட்டியில் நியூசிலாந்தின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். க்ளென் பிலிப்ஸ் மற்றும் பெவோன் ஜேக்கப்ஸ் நிதானமாக விளையாடி ஆட்டத்தை மாற்றினார்கள்.
இறுதியில் அதிரடியாகவும் விளையாடி ரன்களை குவித்தார்கள். க்ளென் பிலிப்ஸ் 70 ரன்களுக்கும் ஜேக்கப்ஸ் 58 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள்.
இறுதியில் மைக்கேல் பிரேஸ்வெல் 2 பந்துகளுக்கு 10 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கேப்டன் மிட்செல் சான்ட்னர் 5 பந்துகளுக்கு 4 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகள், புவனேஷ், நிதீஷ், பிரின்ஸ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். தற்போது இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. முதல் ஓவரிலேயே மெய்டன் ஆனது குறிப்பிடத்தக்கது.
An 116-run partnership between Glenn Phillips (70) and Bevon Jacobs (58) boosting the batting innings in Christchurch ð¤
— BLACKCAPS (@BLACKCAPS) October 24, 2026
Watch and follow the second innings LIVE in NZ on Sky Sport ðº Sport Nation NZ and The ACC ð» #NZvIND pic.twitter.com/3klOU3dBEP
Summary
Glenn Phillips, Bevon Jacobs half-centuries: India set a target of 181 runs!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


