
ஆட்ட நாயகனான சிஎஸ்கே வீரர் பிரசாந்த் வீர்..! 1 ரன்னில் வென்று, குவாலிஃபயர் 2 போட்டிக்கு முன்னேற்றம்!
யுபி டி20 லீக் எலிமினேட்டர் ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது வென்ற பிரசாந்த் வீர் குறித்து...

ஆட்ட நாயகனான பிரசாந்த் வீர் போஸ்டர். - படம்: எக்ஸ் / யுபி டி20 லீக்
யுபி டி20 லீக் எலிமினேட்டர் ஆட்டத்தில் நொய்டா சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பிரசாந்த் வீர் ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தினார்.
எலிமினேட்டர் ஆட்டத்தில் நொய்டா சூப்பர் கிங்ஸ் மற்றும் காசி ருத்ராஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற காசி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த நொய்டா சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் பிரசாந்த் வீர் 28 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். ரவி சிங் 31 ரன்கள் எடுத்து உதவினார்.
அடுத்து பேட்டிங் செய்த காசி ருத்ராஸ் 20 ஓவர்களில் 153/8 ரன்கள் எடுத்தது. 1 ரன் வித்தியாசத்தில் நொய்டா அணி த்ரில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக அபிஷேக் கோஸ்வாமி 45, ஷுபம் சௌபே 43* ரன்கள் எடுத்தார்கள்.
நொய்டா சார்பில் கார்த்திக் சித்து ஹாட்ரிக் விக்கெட் எடுத்து மிரட்டினார். இவருடன் கேப்டன் பிரசாந்த் வீர், வன்ஷ் சௌதரி தலா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள். பந்துவீச்சு, பேட்டிங் என அசத்திய கேப்டன் பிரசாந்த் வீர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
சிஎஸ்கே அணியில் கடந்த சீசனில் இடம்பெற்ற பிரசாந்த் வீர் ஆல்ரவுண்டர் செயல்பாடுகளை வழங்கி அசத்தியுள்ளார். இவரை ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணி பெரிதாக பயன்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
குவாலிஃபயர் 2 போட்டியில் நொய்டா சூப்பர் கிங்ஸ் அணியும் மீரட் மாவேரிக் அணியும் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி இறுதிப் போட்டியில் லக்னௌ ஃபால்கோன்ஸ் அணியுடன் மோதவிருக்கின்றன.
58* with the bat, 2 wickets with the ball. Prashant Veer delivers a complete match-winning performance and takes home the Player of the Match award.
— UP T20 League (@t20uttarpradesh) September 3, 2026
Watch UPT20 Season 4 live on JioHotstar, StarSports 2 Hindi HD, StarSports 2 Hindi & StarSports.#UPT20 #KhiladiYahanBantaHai⦠pic.twitter.com/EoUY0CwTPZ
Summary
CSK player Prashanth Veer named Player of the Match! Advancing to Qualifier 2!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







