கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

ஐசிசியின் ஜூலை மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியாளர்கள் அறிவிப்பு!

ஐசிசியின் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியாளர்கள் இன்று (ஆகஸ்ட் 10) அறிவிக்கப்பட்டுள்ளனர்.

News image

படம் | ஐசிசி

Updated On :10 ஆகஸ்ட் 2026, 4:31 pm IST

ஐசிசியின் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியாளர்கள் இன்று (ஆகஸ்ட் 10) அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு ஐசிசி சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதன் படி, ஐசிசியின் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஜஸ்டின் கிரீவ்ஸ், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் மற்றும் வங்கதேச வீரர் தன்சித் ஹாசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஜஸ்டின் கிரீவ்ஸ் (மேற்கிந்தியத் தீவுகள்)

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்ரவுண்டரான ஜஸ்டின் கிரீவ்ஸ் ஜூலை மாதத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார்.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜஸ்டின் கிரீவ்ஸ் 180 ரன்கள் எடுத்து அசத்தினார். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட அவர், 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஜூலை மாதத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஜஸ்டின் கிரீவ்ஸ் 215 ரன்கள் மற்றும் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இரண்டு ஒருநாள் போட்டிகளில் 32 ரன்கள் எடுத்தார்.

ஹாரி ப்ரூக் (இங்கிலாந்து)

கடந்த மாதம் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக்குக்கு சிறப்பானதாக அமைந்தது. இந்தியாவுக்கு எதிரான தொடர்களில் அவர் சிறப்பாக விளையாடினார். மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஹாரி ப்ரூக் 31 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இருப்பினும், டி20 தொடரில் ஹாரி ப்ரூக் மிகவும் அபாரமாக விளையாடினார். 5 போட்டிகளில் விளையாடிய அவர் 229 ரன்கள் எடுத்தார். ஹாரி ப்ரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை வென்று அசத்தியது.

டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு அதிக ரன்கள் குவித்த ஹாரி ப்ரூக்குக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

தன்சித் ஹாசன் (வங்கதேசம்)

வங்கதேச அணிக்காக தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி ரன்கள் குவிக்கும் வீரராக தன்சித் ஹாசன் உருவெடுத்துள்ளார். கடந்த மாதம் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் வங்கதேசம் விளையாடியது. இந்த இரண்டு தொடர்களிலும் வங்தேச அணிக்காக அதிக ரன்கள் குவித்தார் தன்சித் ஹாசன்.

3 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய தன்சித் ஹாசன் 159 ரன்கள் எடுத்தார். அதேபோல, டி20 தொடரில் அவர் 140 ரன்கள் எடுத்து அசத்தினார். அவரது சிறப்பான ஆட்டம் வங்கதேச அணி சிறப்பாக செயல்பட உதவியது.

ஜஸ்டின் கிரீவ்ஸ், ஹாரி ப்ரூக் மற்றும் தன்சித் ஹாசன் இவர்கள் மூவரில் ஐசிசியின் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை யார் வெல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Summary

The nominees for the ICC Player of the Month award for July were announced today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.