போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!நேபாள வெள்ளம்! பலி 1,290 ஆக உயர்வு; 10-வது நாள்களாக மீட்புப் பணிகள் தீவிரம்!நேபாள வெள்ளம்! 9 நாள்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட இருவர்!ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

யுபி டி20: 4 விக்கெட்டுகள் வீழ்த்திய புவனேஷ்..! இறுதிப் போட்டியில் லக்னௌ ஃபால்கோன்ஸ்!

யுபி டி20 லீக் பிளே ஆஃப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற புவனேஷ்வர் குமார் குறித்து...

Player of the Match Bhuvneshwar Kumar

ஆட்ட நாயகன் புவனேஷ்வர் குமார் - படம்: எக்ஸ் / யுபி டி20 லீக்

Published On :4 செப்டம்பர் 2026, 11:54 am IST

உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் யுபி டி20 லீக் பிளே ஆஃப் போட்டியில் புவனேஷ்வர்குமார் 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, அவரது லக்னௌ ஃபால்கோன்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் தனது 36 வயதிலும் அபாரமான பந்துவீச்சை முக்கியமான போட்டியில் அளித்து அணியை இறுதிப் போட்டிக்கு முன்னேற்றியுள்ளார்.

யுபி டி20 லீக் பிளே ஆஃப் ஆட்டத்தில் லக்னௌ ஃபால்கோன்ஸ் - மீரட் மாவேரிக்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மீரட் மாவேரிக் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த லக்னௌ அணி 19.4 ஓவர்களில் 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஹிமான்ஸு சிங் 61 ரன்கள் குவித்தார். ஜீசன் அன்சாரி 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

அடுத்து பேட்டிங் செய்த மீரட் அணி 20 ஓவர்களில் 98 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரிங்கு சிங் 34, ஜீசன் அன்சாரி 30 ரன்கள் எடுத்தார்கள்.

லக்னௌ அணியில் பந்துவீச்சில் அசத்திய கேப்டன் புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்த வெற்றியுடன் லக்னௌ ஃபால்கோன்ஸ் அணி இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. குவாலிஃபயர் 2 ஆட்டத்தில் மீரட் மாவேரிக் அணி - நொய்டா சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவிருக்கிறது. இதில் வெல்லும் அணியுடன் லக்னௌ ஃபால்கோன்ஸ் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

புவனேஷ்வர் குமார் ஆர்சிபி அணிக்கு 2 முறை கோப்பை வெல்ல உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவரை ஏன் இந்திய அணி பயன்படுத்தவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Summary

Vintage Bhuvi... incredible spell of 4/10 in 4 overs to power Lucknow Falcons into the UPT20 2026 Final

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.