நேபாள வெள்ளம்! பலி 1,290 ஆக உயர்வு; 10-வது நாள்களாக மீட்புப் பணிகள் தீவிரம்!நேபாள வெள்ளம்! 9 நாள்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட இருவர்!ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

சேப்பாக்கத்தில் துலீப் கோப்பை இறுதிப் போட்டி..! அனுமதி இலவசம்!

சென்னையில் நடைபெறும் துலீப் கோப்பை 63ஆவது சீசனின் இறுதிப் போட்டி குறித்து...

Duleep Trophy poster

துலீப் கோப்பை போஸ்டர் - படம்: எக்ஸ் / டிஎன்சிஏ

Published On :4 செப்டம்பர் 2026, 11:13 am IST

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் திடலில் நடைபெறும் துலீப் கோப்பை இறுதிப் போட்டியை இலவசமாகப் பார்க்கலாம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நடைபெறும் உள்நாட்டு முதல் தர கிரிக்கெட் போட்டியில் முக்கியமான ஒரு தொடராகும். இதன் முதல் சீசன் 1961-1962ல் நடைபெற்றது. தற்போது 63ஆவது சீசன் நடைபெற்று வருகிறது.

இந்த சீசனின் இறுதிப் போட்டிக்கு கிழக்கு மற்றும் தெற்கு மண்டல அணிகள் முன்னேறியுள்ளன. தெற்கு மண்டலத்தில் 7 முதல் தர இந்திய அணிகள் கலந்து விளையாடுகின்றனர். இதில் ஆந்திரப் பிரதேசம், கோவா, ஹைதராபாத், கர்நாடகா, கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய அணிகள் இணைந்து விளையாடுகின்றன.

தெற்கு மண்டல அணிக்கு கேப்டனாக திலக் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த நாராயண் ஜெகதீசன் விக்கெட் கீப்பராக விளையாடி வருகிறார்.

இந்த சீசனின் இறுதிப் போட்டி சேப்பாக்கம் திடலில் வரும் செப்.6-10ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான அனுமதி இலவசம் என டிஎன்சிஏ அறிவித்துள்ளது.

செப்.6ஆம் தேதி காலை 9 மணிக்கு கேட் 4 வழியாக ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது ஒரு அறியவகை வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

Summary

Duleep Trophy Final East Zone and South Zone in Chepauk entry free

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.