இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

துலீப் டிராபி: 2-வது இன்னிங்ஸிலும் திலக் வர்மா அசத்தல்; இறுதிப்போட்டியில் சௌத் ஸோன் அணி!

துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நார்த் ஸோன் அணியை வீழ்த்தி சௌத் ஸோன் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Tilak Varma

திலக் வர்மா - படம் | திலக் வர்மா (எக்ஸ்)

Published On :2 செப்டம்பர் 2026, 4:42 pm IST

துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நார்த் ஸோன் அணியை வீழ்த்தி சௌத் ஸோன் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நார்த் ஸோன் மற்றும் சௌத் ஸோன் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் திலக் வர்மா தலைமையிலான சௌத் ஸோன் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நார்த் ஸோன் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய சௌத் ஸோன் அணி, 43.1 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்ஸில் சதம் விளாசி அசத்திய சௌத் ஸோன் அணியின் கேப்டன் திலக் வர்மா இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் அவர் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 79 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும்.

அவரைத் தொடர்ந்து, நாராயண் ஜெகதீசன் 43 ரன்கள், ரிக்கி 42 ரன்கள் மற்றும் சமரன் ரவிச்சந்திரன் 32* ரன்கள் எடுத்தனர்.

நார்த் ஸோன் தரப்பில் அபித் முஸ்டக் இரண்டு விக்கெட்டுகளையும், குர்னூர் பிரார் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் திலக் வர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

சௌத் ஸோன் மற்றும் ஈஸ்ட் ஸோன் இடையேயான இறுதிப்போட்டி வருகிற செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் திடலில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

Summary

South Zone advanced to the final of the Duleep Trophy cricket tournament by defeating North Zone in the second semi-final match.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.