ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

துலீப் டிராபி அரையிறுதி: சதம் விளாசி அசத்திய திலக் வர்மா!

துலீப் டிராபி அரையிறுதிப் போட்டியில் சௌத் ஸோன் அணியின் கேப்டன் திலக் வர்மா சதம் விளாசி அசத்தியுள்ளார்.

Tilak varma

திலக் வர்மா (கோப்புப் படம்) - படம் | பிசிசிஐ

Published On :

துலீப் டிராபி அரையிறுதிப் போட்டியில் சௌத் ஸோன் அணியின் கேப்டன் திலக் வர்மா சதம் விளாசி அசத்தியுள்ளார்.

துலீப் டிராபி கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் நடைபெற்று வரும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நார்த் ஸோன் மற்றும் சௌத் ஸோன் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த நார்த் ஸோன் அணி முதல் இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சௌத் ஸோன் அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் சௌத் ஸோன் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் கேப்டன் திலக் வர்மா சதம் விளாசி அசத்தினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 225 பந்துகளில் 106* ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து, ஷ்ரேயாஸ் கோபால் 88 ரன்கள், நாராயண் ஜெகதீசன் 36 ரன்கள், சமரன் ரவிச்சந்திரன் 27 ரன்கள் எடுத்தனர்.

நார்த் ஸோன் தரப்பில் குர்னூர் பிரார் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அர்ஷ்தீப் சிங் மற்றும் அன்ஷுல் கம்போஜ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

நார்த் ஸோன் அணியைக் காட்டிலும் சௌத் ஸோன் அணி 90 ரன்கள் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

South Zone captain Tilak Varma has impressed by smashing a century in the Duleep Trophy semi-final match.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.