ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்தது.
இஷான் கிஷன், திலக் வர்மா அதிரடி!
முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா 8 ரன்களும், வைபவ் சூர்யவன்ஷி 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 20 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து, இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 44 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 29 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
ஜிம்பாப்வே தரப்பில் பிளெஸ்ஸிங் முசராபானி, ரிச்சர்ட் நிகராவா, பிராட் ஈவன்ஸ், நியூமேன் நியாம்ஹுரி மற்றும் பிரையன் பென்னட் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி களமிறங்குகிறது.
Summary
Batting first in the second T20 match against Zimbabwe, the Indian team scored 219 runs for the loss of 5 wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிரடியில் மிரட்டிய ஆஷிக்; திருப்பூர் தமிழன்ஸுக்கு 206 ரன்கள் இலக்கு!

ஆர்பிஐ வேலைக்குத் திரும்பிய இஷான் கிஷன்..! வைரலாகும் புகைப்படங்கள்!

ஜிம்பாப்வேவை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி!

2-வது டி20: அபிஷேக் சர்மா அசத்தல்; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK




