
துலீப் டிராபி: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஈஸ்ட் ஸோன் அணி!
துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் சென்ட்ரல் ஸோன் அணியை வீழ்த்தி ஈஸ்ட் ஸோன் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

வைபவ் சூர்யவன்ஷி - படம் | பிசிசிஐ
துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் சென்ட்ரல் ஸோன் அணியை வீழ்த்தி ஈஸ்ட் ஸோன் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் சென்ட்ரல் ஸோன் மற்றும் ஈஸ்ட் ஸோன் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ஈஸ்ட் ஸோன் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சென்ட்ரல் ஸோன் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 266 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஈஸ்ட் ஸோன் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 266 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் சென்ட்ரல் ஸோன் அணி 158 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஈஸ்ட் ஸோன் அணிக்கு 159 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
East Zone are into the final ð
— BCCI Domestic (@BCCIdomestic) September 1, 2026
Mohd. Shami hits the winning runs ð
They beat defending champions Central Zone by 4⣠wickets ð#DuleepTrophy | #CZvEZ
Scorecard â¶ï¸ https://t.co/kyExeix2VY pic.twitter.com/yzYIVMctVH
159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஈஸ்ட் ஸோன் அணி 39.3 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்ட்ரல் ஸோன் அணியை வீழ்த்தியது.
இரண்டாவது இன்னிங்ஸில் ஈஸ்ட் ஸோன் அணியில் அதிகபட்சமாக 43 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் இஷான் கிஷன் 39* ரன்கள், அபிமன்யு ஈஸ்வரன் 24 ரன்கள், குமார் குஷாக்ரா 22 ரன்கள் எடுத்தனர்.
சென்ட்ரல் ஸோன் தரப்பில் ஹர்ஷ் துபே 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சரண்ஷ் ஜெயின் மற்றும் யஷ் தாக்குர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய முகேஷ் குமார் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வருகிற செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
The East Zone team advanced to the final of the Duleep Trophy cricket tournament by defeating the Central Zone team in the first semi-final match.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






