குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

பாகிஸ்தானை வீழ்த்தியது எப்படி? ரகசியம் பகிர்ந்த ஸ்ரீ சரணி!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குறித்து இந்திய வீராங்கனை ஸ்ரீ சரணி பேசியுள்ளார்.

படம் | பிசிசிஐ

Published On :6 செப்டம்பர் 2026, 1:31 pm IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குறித்து இந்திய வீராங்கனை ஸ்ரீ சரணி பேசியுள்ளார்.

துபையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியை 55 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து அதிர்ச்சியளித்தது இந்திய அணி. இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்ரீ சரணி 7 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். பிரேமா ராவத் 9 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா 5 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

இந்த நிலையில், இந்திய அணி பந்துவீச்சில் தங்களது திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்ததாக சுழற்பந்துவீச்சாளர் ஸ்ரீ சரணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக நாங்கள் ஒன்றாக உட்கார்ந்து ஆலோசனை செய்தோம். பிரேமா ராவத், தீப்தி சர்மா, ராதா யாதவ் என அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசினோம். நாங்கள் ஆலோசனை செய்த திட்டங்களை போட்டியில் அப்படியே செயல்படுத்தினோம். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு உதவும் என்பதை உணர்ந்தோம். அதற்கேற்ப எங்களது திட்டங்களை மிகச் சரியாக செயல்படுத்தினோம் என்றார்.

Summary

Indian player Sri Sarani has spoken about the magnificent victory over Pakistan in the Asia Cup cricket tournament.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.