
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தவரிசையில் அணிகள் பிடித்துள்ள இடங்கள்!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடருக்குப் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் அணிகள் பிடித்துள்ள இடங்கள் குறித்து...

படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இங்கிலாந்து அணி தனது இடத்தை வலிமையாக்கிக் கொண்டுள்ளது.
பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்தத் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றி அசத்தியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியல் கடந்த சில வாரங்களாக முக்கிய மாற்றங்களை சந்தித்து வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வங்கதேச அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. அதன் பின், ஆஸ்திரேலிய அணி அந்தத் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
இலங்கைக்கு எதிராக காலேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதன் பின், இலங்கை அணியின் இளம் வீரர் சோனல் தினுஷா அபாரமாக விளையாடி இரண்டாவது டெஸ்ட் டிராவில் முடிவடைய உதவினார்.
தற்போது, பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் மற்றும் கேப்டன் ஜோ ரூட் தலைமையிலான புதிய கூட்டணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்று அசத்தியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும். இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான தொடருக்குப் பிறகு, தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது.
More #WTC27 gains for England after a series sweep over Pakistan ð
— ICC (@ICC) September 12, 2026
More on the recent standings ð https://t.co/Ag5irO9kgu pic.twitter.com/bvUt7njASP
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் ஆஸ்திரேலிய அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.
நியூசிலாந்து, வங்கதேசம், இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
Summary
Regarding the positions held by the teams in the World Test Championship rankings following the Test series between England and Pakistan...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




