
சஞ்சு சாம்சனை நீக்கியதுதான் நான் எடுத்ததிலேயே கடினமான முடிவு: கௌதம் கம்பீர்
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனை பிளேயிங் லெவனிலிருந்து நீக்கியதுதான் தான் எடுத்ததிலேயே மிகவும் கடினமான முடிவு என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
சஞ்சு சாம்சன் - கௌதம் கம்பீர்
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனை பிளேயிங் லெவனிலிருந்து நீக்கியதுதான் தான் எடுத்ததிலேயே மிகவும் கடினமான முடிவு என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது
இந்தத் தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் மிகவும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபிஷேக் சர்மா 229 ரன்களும், சஞ்சு சாம்சன் 117 ரன்களும் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர்.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனை பிளேயிங் லெவனிலிருந்து நீக்கியதுதான் தான் எடுத்ததிலேயே மிகவும் கடினமான முடிவு என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: சஞ்சு சாம்சன் எனக்கு எந்தவொரு நன்றியும் தெரிவிக்க அவசியமில்லை. அவர் இந்திய அணியில் இருப்பதற்கு காரணம் அவரது திறமையே. அவரால் என்ன முடியும் என்பதைக் காட்டியுள்ளார். திறமை இல்லாமல் ஒருவரால் உலகக் கோப்பைத் தொடரில் தொடர் நாயகன் விருதினை வெல்ல முடியாது. அவர் அணிக்காக நன்றாக விளையாடியிருக்கிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பிளேயிங் லெவனிலிருந்து சஞ்சு சாம்சனை நீக்குவது மிகவும் கடினமான முடிவாக இருந்தது. என்னுடைய தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காலத்தில் நான் எடுத்ததிலேயே மிகவும் கடினமான முடிவு என்றே அதனைக் கூறுவேன். ஏனெனில், சஞ்சு சாம்சன் அந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஆனால், சில நேரங்களில் வீரர்களின் ஃபார்மினை கருத்தில் கொண்டும் முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கிறது என்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தொடர்ச்சியாக குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்ததால், சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக அறிமுக வீரராக வைபவ் சூர்யவன்ஷிக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Gautam Gambhir has stated that dropping Sanju Samson from the playing XI during the T20 series against England was the toughest decision he ever made.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







