
கிரிக்கெட்டிற்கு கிடைத்த புதிய வீடு..! ஜப்பானின் முயற்சியைப் பாராட்டிய சச்சின்!
ஐசிசி பகிர்ந்த முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் பதிவு குறித்து...

ஜப்பான் மொழியில் கிரிக்கெட் விதிகள், சச்சின் டெண்டுல்கர் - படங்கள்: எக்ஸ் / சச்சின் டெண்டுல்கர்
முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில், “கிரிக்கெட்டிற்கு புதிய வீடு கிடைத்துள்ளது” என ஜப்பானின் முயற்சியைப் பாராட்டி பதிவிட்டுள்ளார். இதனை ஐசிசி பகிர்ந்துள்ளது.
இந்திய ஆடவர் அணி ஜப்பானுக்குச் சென்று ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடியது. இந்தப் போட்டி மழையினால் 5 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
இதில் 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இருப்பினும் ஜப்பான் அணியின் விளையாட்டு விதம் நடப்பு சாம்பியனையே சற்று பயத்தில் தள்ளியது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது.
ஜப்பானில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் பிரபலமாக இருக்கின்றன. ஆனால், முதல்முறையாக இந்தியா உடன் டி20யில் விளையாடியது.
இந்த புதிய விளையாட்டை ஜப்பான் மக்கள் புரிந்துகொள்ள வேண்டுமென கையேடுகளைத் தயாரித்து அளித்தது வரவேற்பைப் பெற்றுள்ளது. இது குறித்து சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
கிரிக்கெட்டிற்கு புதிய வீடு கிடைத்துள்ளது என்பதைப் பார்க்க மிகவும் சிறப்பாக இருக்கிறது.
இந்திய அணி ஜப்பானில் விளையாடுவதே சிறப்பான விஷயம். ஆனால், எனக்கு புன்முறுவலை ஏற்படுத்தியது எதுவென்றால் நுழைவு வாயிலில் பார்வையாளர்களுக்கு கிரிக்கெட் விதிகள் அடங்கிய விரைவுப் பயன்பாட்டிற்கான வழிகாட்டியைக் கொடுத்து அனுப்பியதுதான். அதனால், பார்வையாளர்கள் போட்டியை மேலும் நன்றாகப் புரிந்துக்கொள்வார்கள்.
நமக்கு எல்லோருக்குமே முதல் கிரிக்கெட் போட்டி என்பது இருக்கும். மக்கள் பலரும் தங்களது முதல் போட்டியைக் கண்டது மிகவும் அழகாக இருக்கிறது.
இந்த சவாலை ஏற்று, அதில் வெற்றி கண்ட ஜப்பான் அணிக்கு வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார். ஐசிசி நிர்வாகம் இதனைப் பகிர்ந்து பாராட்டியுள்ளது.
A cricket crash course that caught the eye of the maestro Sachin Tendulkar ðð¯ðµ
— ICC (@ICC) September 23, 2026
More about the thriller ð https://t.co/kRxfrQJchU pic.twitter.com/XSJrLCwlUY
Summary
There’s something very special about watching cricket find new homes Sachin praises japans efforts
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







