பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

ஐசிசி தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறிய சிக்கந்தர் ராஸா!

ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராஸா ஐசிசி தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது குறித்து...

Sikandar Raza

சிக்கந்தர் ராஸா - படம்: ஐசிசி

Published On :

ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராஸா (40 வயது) ஐசிசி ஒருநாள் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

பாகிஸ்தானில் பிறந்த சிக்கந்தர் ராஸா பின்னர் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வேக்கு குடியேறினார். எஞ்சினியராக இருந்து பின்னர் கிரிக்கெட் ஆர்வத்தினால் ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக உயர்ந்தார்.

ஜிம்பாப்வே அணியின் டி20 கேப்டனாக இருக்கும் சிக்கந்தர் ராஸா ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது கேப்டனாக இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 0-3 என ஜிம்பாப்வே தோல்வியுற்றது. இந்தத் தொடரில் சிக்கந்தர் ராஸா 183 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த ஆல்ரவுண்ட் சாதனை மூலம் ஐசிசி ஆல்ரவுண்டருக்கான தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். வங்கதேச வீரர் மெஹிதி ஹாசன் மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டார்.

இந்திய வீரர் அக்‌ஷர் படேல் இந்தப் பட்டியலில் ஒன்பதாவது வீரராக இருக்கிறார். டாப் 10ல் ஒரேயொரு இந்திய வீரராக அக்‌ஷர் படேல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐசிசி ஒருநாள் போட்டி: ஆல்ரவுண்டருக்கான தரவரிசை

1. அஜமத்துல்லா ஓமர்சாய் - 337 புள்ளிகள்

2. சிக்கந்தர் ராஸா - 276 புள்ளிகள்

3. மெஹிதி ஹாசன் - 260 புள்ளிகள்

4. மைக்கேல் பிரேஸ்வெல் - 250 புள்ளிகள்

5. மிட்செல் சான்ட்னர் - 247 புள்ளிகள்

Summary

Zimbabwe star Sikandar Raza closes in on top spot in Men’s Rankings

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER