அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

6 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடும் பாபர் அசாம்!

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளார்.

Pakistan team captain Babar Azam

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் - படம் | AP

Published On :

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளார்.

பாகிஸ்தான் அணி அண்மையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது. அந்த டெஸ்ட் தொடரில் மோசமாக விளையாடியதால் அணியின் கேப்டன் பாபர் அசாம் மீதும், பாகிஸ்தான் வீரர்கள் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பாபர் அசாம் மீண்டும் உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

பாபர் அசாம் ஆயில் அண்ட் கேஸ் டெவலப்மண்ட் அணிக்காக விளையாடவுள்ளார். கேப்டனாக அல்லாமல் ஒரு வீரராகவே அவர் முதல் தர கிரிக்கெட்டில் விளையாடவுள்ளார். கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு அவர் முதல் தர போட்டிகளில் விளையாடியிருந்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்ததால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உள்ளூர் போட்டிகளில் விளையாடாமல் சர்வதேசப் போட்டிகளில் மட்டுமே விளையாடுவதால் போதிய பயிற்சியின்றி பாகிஸ்தான் அணி தொடரை முழுமையாக இழந்திருக்கலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கருதுகிறது. அதன் காரணமாகவே, கேப்டன் பாபர் அசாம் உள்பட மூத்த வீரர்கள் பலரும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல்வேறு பயிற்சியாளர்கள் மற்றும் புதிய கேப்டன்களை நியமித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Pakistan team captain Babar Azam is set to play in a domestic first-class cricket match after six years.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.