தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

சரியான முடிவுகள் எடுக்கத் தெரியவில்லை; பாபர் அசாமை கடுமையாக விமர்சித்த அக்தர்!

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கு சரியான முடிவுகள் எடுக்கத் தெரியவில்லை என முன்னாள் வீரர் சோயப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Babar azam

பாபர் அசாம் (கோப்புப்படம்)

Published On :

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கு சரியான முடிவுகள் எடுக்கத் தெரியவில்லை என முன்னாள் வீரர் சோயப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றிவிட்ட நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது. முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 194 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் தலைமைப் பண்பை முன்னாள் வீரர் சோயப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாபர் அசாம் சரியான முடிவுகளை எடுக்காததன் காரணமாகவே பல பிரச்னைகள் வருவதாக நினைக்கிறேன். அந்த இடத்தில் நான் இருந்திருந்தால், என்ன நடந்திருக்கும் என அனைவருக்கும் தெரியும். பாபர் அசாம் தலைமைப் பண்பில் சரியான முடிவுகளை எடுக்கத் தெரியாமல் மிகவும் தடுமாறுகிறார். பாபர் அசாமிடமிருந்தும் தற்போதுள்ள பாகிஸ்தான் அணியிடமிருந்தும் இதற்கு மேல் சிறப்பாக விளையாட வேண்டும் என எதிர்பார்க்க முடியாது என்றார்.

அண்மையில் டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் மீண்டும் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Former player Shoaib Akhtar has severely criticized Pakistan captain Babar Azam, stating that he does not know how to make the right decisions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.