இம்ரான் கான் கேப்டன்சியின் கீழ் விளையாடியிருந்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் எடுத்திருக்கலாம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
மிகவும் அபாயகரமான பந்துவீச்சாளர்களில் ஒருவராக அறியப்பட்டவர் பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் சோயப் அக்தர். பாகிஸ்தான் அணிக்காக 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 178 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில், இம்ரான் கான் கேப்டன்சியின் கீழ் விளையாடியிருந்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் எடுத்திருக்கலாம் என சோயப் அக்தர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: இம்ரான் கானின் சிறப்பான கேப்டன்சியின் கீழ் நான் விளையாடியிருந்தால் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டிருப்பேன். அதுமட்டுமின்றி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருப்பேன்.
அணியில் உள்ள மற்ற வீரர்களைக் காட்டிலும் நான் மூன்று மணி நேரம் முன்கூட்டியே எழ வேண்டியிருக்கும். சைக்கிளிங் செய்துவிட்டு, உடற்பயிற்சி கூடத்துக்குச் செல்வேன். அதன் பின், என்னுடைய முழங்காலுக்கு மருந்து போட வேண்டியிருக்கும். அதன் பின், போட்டிகளில் பந்துவீச்சில் ஈடுபடுவேன். அதன் பின், மீண்டும் முழங்கால் வலியிலிருந்து விடுபட ஐந்து மணி நேரம் எடுக்கும். என்னுடைய வாழ்க்கை இப்படிதான் இருந்தது என்றார்.
பாகிஸ்தான் அணியின் கேப்டனாக வாசிம் அக்ரம் செயல்பட்டபோது, சோயப் அக்தரை அணியில் அறிமுகப்படுத்த சரியான நேரம் வராததாகக் கூறி டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது அறிமுகத்தை தாமதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
51 வயதாகும் சோயப் அக்தர் பாகிஸ்தான் அணிக்காக 163 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 247 விக்கெட்டுகளையும், 15 டி20 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Former Pakistan player Shoaib Akhtar has stated that he could have taken 400 wickets in Test cricket had he played under Imran Khan's captaincy.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஜம்மு & காஷ்மீர் பயிற்சி: தயார்நிலையில் சா்ஃப்ராஸ் கான்

இலங்கை டெஸ்ட் தொடர்: சாய் சுதர்சனுக்குப் பதிலாக சர்ஃபராஸ் கான் அணியில் சேர்ப்பு!

உதயநிதி கைது! வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோ மேற்கோள் காட்டிய இம்ரான் பிரதாப்கரி யார்?

இம்ரான் கானுக்கு அவசர மருத்துவச் சிகிச்சை: சர்வதேச சமூகம் தலையிட மகன் வேண்டுகோள்!
விடியோக்கள்

Vishwanath and Sons Public Review! | படம் எப்படி இருக்கு? | Suriya | Mamitha Baiju




